பக்கம்:எழில் விருத்தம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 ö覆ó》6》 வீட்டோரச் சுவரிருந்து செம்மூக்குக் கிள்ளை விரிவானில் சிறகடித்து வெளிவானில் கத்தும்; மேட்டோரப் பெருமரத்தில் காக்கைகளின் கூச்சல் விலைபேசும் பெருஞ்சந்தை இரைச்சலெனக் கேட்கும்; காட்டோரக் கூடெல்லாம் காதினிக்கும் பாட்ல்: கருங்குயில்கள் கவிஞன்போல் இடையிடையே பாடும்; கூட்டோரத் தேன்குடத்தில் கருவண்டு செந்தேன் குறைநிறைக்கும்; கொடியூக்கும்; குளிர்ந்துவரும் காலை ! 3 செம்பருத்திச் செடியூக்கும்; தீக்கொண்டைச் சேவல் சிறகடித்துக் குரலெழுப்பிப் பெருமுழக்கம் செய்யும், கம்பத்து விளக்கெல்லாம் ஒளிமங்கிப் போகும்; கருவானம் உருமாறும்; கவிழ்ந்தவிருள் தேயும்; கும்பத்து நீர்மொண்டு சாணமிடும் பெண்கள் குரல்கேட்கும்; குளிர்காற்றுக் கதவிடையில் பாயும்; தெம்பற்றுக் கிழப்பாட்டி பாக்கிடிக்கும் ஓசை தெருக்கோடி எதிரொலிக்கும்; சிரித்துவரும் காலை 14 குளத்தினிலே தாமரைகள் தமிழ்மனன்ர் கூட்டம், குளிர்அல்லி முகஞ்சுருக்கும்; கொடித்தக்கை பூக்கும்; பளபளக்கும் பச்சையிலை மரகதப்பூந் தட்டு; பாய்ந்தேறும் சொரித்தவளை பாசியிடைக் கத்தும்; இளவாளை கொலைவாளாம்; எழுந்தடித்துப் பாயும்; இலைமறைவில் நீர்ப்பாம்பு தலைநீட்டிப் பார்க்கும்; உளத்தினிலே மகிழ்வூட்டும் தொடுவானச் செம்மை ஒளிக்கதிர்கள் பொன்வரிகள் ஒளிர்ந்துவரும் காலை ! 5