பக்கம்:எழில் விருத்தம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 வாணிதாசன் வாலுயர்த்தி இளங்கன்று தாய்மடியை முட்டும்; மடிகறக்கும் நல்லாயன் கலம்நிறையும் தீம்பால்; காலுயர்த்திப் பாய்ந்தோடும் கட்டவிழ்த்த காளை; கடைமுன்றில் மாக்கோலம் கைத்திறத்தைக் காட்டும் ; கோலுயர்த்தி எருதோட்டி உழுபடையைத் தூக்கிக் கொல்லைக்குச் செல்கின்ற நல்லுழவன் இன்றேல் வேலுயர்த்தி அரசாளும் எந்நாடும் என்றும் - விடியாதே எனச்சொல்லி விடியவரும் காலை! 9 வல்லுயிரைப் புறங்கண்டு வாழுமுயிர் ஒம்பும்; மண்ணுலகும் விண்ணுலகும் வாழ்வளித்துக் காக்கும்; எல்லையிலா நெடுங்கால இயற்கைதந்த வான எழிற்செல்வம் தீச்செல்வம் ஒளிச்செல்வம் யாதாம்? மெல்லிசையில் குயில்பாட விரிந்தமலர் நாற விரைந்தோடும் நீள்குன்ற அருவிமுழ வார்க்க கொல்லன்தீ உலை.பழுக்கும் நெடுமாடச் செப்புக் குடம்போல வானுயரும்; குளிர்ந்துவரும் காலை 10 முன் காட்டிய நூற்பாவில் கூறிய எண்சீர் விகற்பங்களுள் இஃது ஒருவகை விகற்பம். காய்ச்சீர் மூன்றும், தேமாச்சீர் ஒன்றும் புணர்ந்து இரட்டிய எண்சீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம். -