பக்கம்:எழில் விருத்தம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் 65 }{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{{ அந்தியிலே மேற்றிசையில் தொடுவானப் பரப்பில் அழகூட்டும் முகிலினங்கள்; அடர்ந்தபெரு மலைகள் செந்தீயில் வெந்தவியும்; சிலுசிலுக்கும் குளிர்கால்; சிற்றோடை சலசலக்கும்; திசைமறையும் பரிதி; பொந்திருந்து குரல்கொடுக்கும் கூகையினம்; அலர்ந்த புதுப்பூக்கள் மணம்பரப்பும்; புள்ளடையும் புதரில்; மந்தைமணி ஒலிகேட்கும்; குளம்படிந்த எருமை வந்தடையும் கொட்டகைக்கு வந்தடையும் இரவே ! 1 தாரிட்ட திரையாகும் தலைமீது விரிவான்; தழைமரத்தில் பகலெல்லாம் ஒளிந்திருந்த பறவை கூரிட்ட வாய்திறந்து குரல்காட்டிக் குளிர்நீர்க் குளம்நோக்கி இணையிணையாய் இறகடித்துக் குறுகும்; வேரிட்ட குண்டுபலா வெடித்திட்ட வகைபோல் விண்மீன்கள் கருவானில் அங்குமிங்கும் கிளம்பும் ; ஊரிட்ட இருள்கிழிக்கும் விளக்கெல்லாம் அறிஞர் உரையொக்கும்; ஊரடங்கும் ஓடிவரும் இரவே ! 2