பக்கம்:எழில் விருத்தம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 இரவு மலையருவி முழவார்க்கும்; வட்டமிடும் துரிஞ்சில்; வாயிலிலே மணம்பரப்பி வந்தடையும் குளிர்கால்; இலையுதிரும்; கொடிமுல்லை நுணாப்பூக்கள் மலரும்; இல்லத்து நீள்வாழை படபடக்கும்; அழைக்கும்; குலையுதிரும் முதிர்ந்தபழம்; குளம்கூம்பும் மலர்கள் கொட்டைகையில் கால்நீட்டி வைக்கோலை எருமை தலைநீட்டி இழுக்கின்ற மெல்லோசை இரவில் தனிஇனிமை தனிஇனிமை, தடித்துவரும் இரவே 3 வீட்டிடையில் ஒளியடங்கும்; மக்களொலி அடங்கும்; விரிகடலில் பேரலைகள் கரைமோதி அடங்கும்; கூட்டிடையில் இசையடங்கும்; வண்டடங்கும் மலரில்; குயிலடங்கும் பழத்தோப்பில்; மயிலடங்கும் புதரில் காட்டிடையில் விலங்கடங்கும்; கலையடங்கும் பிணையில்; காரெருமை கொட்டைகையுள் கால்நீட்டி அடங்கும்; மேட்டிடையில் வான்பார்க்கும் சிறுகுடிசை உழவர் வெறுவயிற்றுப்ப சியடங்க அடங்கும்கண் ணிமையே ! 4 ஊருறங்க உறங்காதார் உளரென்ப துரைக்கும் ஊளையிடும் நரிக்குலமும் நாய்க்குலமும்; குளத்து நீருறங்க உறங்காத நீள்குன்றத் தருவி - நெளிந்துவரும் பாம்பைப் போல் இழிந்துவரும் இடுக்கில்; காருறங்க உறங்காரே கண்விழிக்கும் உடுக்கள்; களவுசெய்வோர் பொருள்காப்போர் காதலிப்போர் இரவில் ஊருறங்க உறங்காரே, உலகறிந்த நிகழ்ச்சி! ஒண்கடலும் உறங்காமல் ஓலமிடல் அழகோ? 5