பக்கம்:எழில் விருத்தம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வாணிதாசன் கடைந்தெடுத்த தந்தக்கால் கட்டிலின்மெல் லணையில் கட்டவிழா முல்லைமலர்ப் பாயலின்மேற் பரப்பில் அடைந்திருந்தே உனைமறந்தே அன்பாற்றில் மிதந்தே அகமகிழ்ந்த காதலர்கள் கண்டிருப்பாய் இரவே! உடைந்தமனத் துயருற்றோர் உறக்கமின்றிப் புரள ஊமையைப்போல் இருப்பாயோ? விளக்குவையோ உரையை? அடையிருளே! நீ இன்றேல் உயிரினங்கள் அமைதி அடையாவே! நல்வாழ்வும் அடையாயில் வுலகே! 9 கோட்டான்கள் உன்படையோ? குளிர்காற்றுக் கொடியோ? குன்றங்கள் உன்னரசின் நீண்டநிலப் பரப்போ? காட்டாறு மும்முரசோ? கருவான உடுக்கள் கருவூலப் பொன்னாமோ? முளைத்துவரும் நிலவு தீட்டாத கூர்வாளோ? வெள்ளிமுடி மணியோ? செங்கோலோ முல்லைமலர்? செவ்வல்லிக் குடையோ? நாட்டரசும் உன்னரசின் கீழ்ப்பட்ட அரசே! நல்லிரவே! நீவாழி! நீவாழி நிலைத்தே! '10 காய்ச்சீர் மூன்றும் புளிமாச்சீர் ஒன்றும் புணர்ந்திரட்டி வந்த எண்சீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம். முன்னைய எண்சீர் விருத்தத்துள் கூறப்பெற்ற விகற்பங்களுள் இஃது ஒரு வகையாகும். -