பக்கம்:எழில் விருத்தம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் - 69 தேன்து கர்ந்திடும் வண்டுகள் தழைத்த செடியில் மொய்த்திடும்; செவிக்கிசை அளிக்கும்; மான்கள் பாய்ந்திடும்; மணிக்குரல் புறவு மரத்தில் தங்கியே இணையினை அழைக்கும்; ஏனல் கொய்பவர் இரைச்சலுக் கடங்கி எழுந்து மாமயில் பதுங்கிடும் மலைமேல்; வானில் தோன்றிய கூன்.பிறை மதிபோல் வந்து தோன்றினை வாழிநீ அருவி! 1. அல்லும் நீள்பகல் அருகிய ருகியே - அடர்ந்த சாரலில் மெல்லநீ தவழ்ந்து கல்லும் தேய்த்தனை; பாய்ந்து மேல் வழிந்து கடந்து வந்தனை மாமலை அருவி ! சொல்லில் வல்லவர் பேருரை நயம்போல் தொடர்ந்து வீழ்ச்சியாய் மாறினாய்; குளிர்நீர்ச் செல்வம் தந்திடும் மின்வளம் அளித்தே செழிக்கச் செய்தனை வாழ்த்திடும் உலகே 2