பக்கம்:எழில் விருத்தம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8() வாணிதாசன் காடு சுற்றியே காவினில் கிளைகளில் கண்ட கூடு சுற்றியே காக்கையின் கூண்டினில் முட்டை தேடி யிட்டனனை; ஆயினும் செழுமரச் சோலை கூடு கட்டிடக் குறியிலாக் குறைபெருங் குறையே! 9 தெள்ளு தீந்தமிழ்ச் செழுங்கவி வாணனைப் போன்றே உள்ளம் பொங்கிட உணர்வுமே லெழுந்திட நெஞ்சம் அள்ளுறு பாட்டினை இசைக்கிறாய் அடிக்கடி; ஆனால் வள்ளல் யாருளார் இசைப்பொருள் உணர்ந்துமே வழங்க ! - 1 O 'குறிய மாவொடு கூவிளம் இருவிளம் மாவொன்று அறிதி" என்னும் விருத்தப்பாவின் படி அமைந்த கலித்துறைச் செய்யுள் இது. .