பக்கம்:எழில் விருத்தம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் 81 15. நானிலம் வான் எழுந்த பிள்ளைமதி மலைஎழுந்த நீளருவி ! மலர்பூஞ் சாரல் தேன் எழுந்த வட்ட இறால் செழுமுகிலின் கருநிலவு! திகழும் உச்சி கூன் எழுந்த மலைத்தொடரில் குரல்கொடுக்கும் மழைக்களிறு கொல்லும் வேங்கை " ... ', ஊன் எழுந்த பிறப்பொக்கும்! ஒவ்வாத சிறப்பென்றே உணரு வோமே! - 1. முல்லை : - : புரிமுற்றி நீண்டிருக்கும் புதுக்கயிறு பொற்கொடிகள் பூத்துத் தாவி - உரிமுற்றிக் கவைக்கிளைகள் உயர்ந்திருக்கும் மரமேறும் ஒளிசேர் முல்லை