பக்கம்:எழில் விருத்தம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 எழில் விருத்தம் # 8 மொழிவகுத்தோர் முன்னோர்கள் மூளுகின்ற ஒலியெல்லாம் முறையே செய்து வழிவகுத்தார்; ஒலிக்கேற்ற வரிவடிவை அமைத்திட்டார் மக்கள்; ஆனால் பழிவகுத்தர் சில்லோர்கள் பண்பில்லாக் கீழ் மக்கள்; படைப்பில் ஒன்றே! விழிவகுத்தார் துறைதோறும் மேன்மைபெறு வாழ்விற்கே மேலோர் ஆமே! . பிறப்பினிலே சாதிபல பிறப்பித்து வாழ்ந்தாலும் பிறந்து பின்னர் இறப்பினிலே வீழாமல் எவரிருந்தார் எந்நாட்டில் என்று கேட்டால் சிறப்பினிலே வாழ்கின்றார் செத்தாலும்; அஃதில்லார், சீர்த்தி என்னாம்? மறப்பினிலே வாழாமல் ‘. . . . . . .” வாழ்வாங்கு வாழ்ந்திருக்கும் வழிகாண் போமே!