பக்கம்:எழில் விருத்தம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் 87 நினைத்துப் பார்க்கின்... கவிஞரேறு வாணிதாசன் 1915 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 22 ஆம் நாள் புதுவையை அடுத்த வில்லவ நல்லூரில் (வில்லியனுர்) திருக்காமுவுக்கும் துளசியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தேன். இன்று கவிஞரேறு, பாவலர் மணி, பாவலர் மன்னன், புதுமைக் கவிஞர் வாணிதாசன் என்கின்ற பாராட்டுப் பெயர்களைப் பெற்று நான் நடமாடுகின்றேன். என் பெற்றோர்கள் எனக்கிட்ட பெயர் அரங்கசாமி; அழைத்த பெயர் எத்திராசன். என் ஏழாவது வயதில் என் துணைக்கு ஒரு பெண் மகவை ஈன்று என் அன்னை என்னை விட்டு மறைந்தார்கள். தந்தையை ஈன்ற அம்மாயி என்ற என் பாட்டியால் செல்லமாக வளர்க்கப்பட்டேன். அந்நிகழ்ச்சி எனது கீழ்க்கண்ட பாடலால் விளங்கும். என் அன்னை சிற்றுாராள்! எழுதாத பாடல் இல்லறத்தின் வழிகாட்டி! புகழ்ச்சியில்லை! உண்மை! மின்னலிடைத் தேயாத வெண்மதியம்! நீங்கள் - விரும்புகின்ற என் பாட்டின் ஆதியவள். அந்தத் தென்னவளைத் தீந்தமிழை என்னுயிரை அன்பைச் சிறுவயதில் நானிழந்தேன்! ஆனாலும் அந்த முன்னவர்கள் தீந்தமிழை மறக்கவுமா கூடும்? முழுநேரம் அவள்கனவே! கனவும் ஒரு கானல்!