பக்கம்:எழில் விருத்தம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் 89 உறவுப் பெண்ணை என் தந்தையார் மறுமணம் செய்து கொண்டார். என் சிற்றன்னை பெயர் செல்லம்மாள். நான் முதன்முதல் எழுத்தறிவிக்கும் சடங்கோடு ஒரு திண்ணைப் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். நினைத்துப் பார்க்கின் அது ஒரு பசுமையான நிகழ்ச்சி. திண்ணைப் பள்ளிக்கூடம் போவதாகப் போக்குக் காட்டித் தெருக்கோடியில் உள்ள சிறு கொட்டகையில் ஒளிந்து கொள்வேன். ஆண்டுதோறும் காமனுக்கு விழா எடுப்பதற்காக ஊரார்கள் சிறு கொட்டகை கட்டி அதன் முன் போய்க் கரும்பு, வாழை முதலியன நட்டு நவதானியம் வித்தி வழிபடுவார்கள். இன்றும் இந்நிகழ்ச்சிகள் சிற்றுார்களில் நடைபெறுதலைக் காணலாம். அந்தக் கொட்டகையே என் திண்ணைப் பள்ளிக்குப் பதில் பல முறை புகலிடம் தந்ததுண்டு. அதற்காக நான் எந்தத் தண்டனையும் அடைந்ததாக நினைவில்லை. திண்ணைப்பள்ளி ஆசிரியர் நான் தாயற்ற பிள்ளை என்பதற்காக என்னை மன்னித் திருக்கக் கூடும். தாயற்ற காரணத்தாலோ தந்தையின் சிறப்பாக என் பாட்டியின் அன்பாலோ நான் சிறு வய்தில் விடாப்பிடிக் கண்டனாகவே இருந்தேன். என் சிற்றன்னை செல்லம்மாள் இன்னும் உயிர் வாழ்கிறார்கள். அவர்கள் நான் எந்தத் தவறு செய்தாலும் மறைத்து விடுவார்களே தவிர மனங்குமுற மாட்டார்கள். மாற்றாந்தாய்க்கு அவர்கள் ஒரு விதிவிலக்கு. கல்வி நிலை அந்தநாள் அரசாண்ட பிரெஞ்சுக்காரர்கள் புதுவையை எட்டுக் கொம்யூன்காளாகப் பிரித்திருந்தனர்.