பக்கம்:எழில் விருத்தம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் 9 | அற்றை நாளில், E.S.I.C.யைப் போன்று செர்த்திபிகா என்ற தேர்வு நடைபெறுவதுண்டு. அதில் குறிப்பிட்ட வகுப்பிலிருந்தே மாணவர்களைத் தேர்வுக்கு அனுப்புவர். வெவ்வேறு ஆசிரியர்கள் கண்காணிப்பில் புதுவையில் நடைபெறும் அத்தேர்வில் மொழிப் பாடம், கணக்கு , கட்டுரை, செய்யுள், இலக்கணம், சொல்வதெழுதுதல் ஆகியன எழுத்தாலும் வாய்மொழியாலும் இடம்பெறும். இதில் வெற்றி பெற்றோர்க்குச் சான்றிதழ்கள் வழங்கப் பெறும். இந்தப் பொதுத் தேர்வெழுத நான் குறிப்பிட்ட வகுப்பிற்கும் கீழ் வகுப்பிலிருந்தே செல்ல அனுமதிக்கப் பட்டேன். ஆசிரியர்கட்கு என்மீது அவ்வளவு நம்பிக்கை. *1928இல் அத்தேர்வில் முதலாவதாக வெற்றியும் பெற்றேன். கீழ் வகுப்பிலிருந்தே நான் ஒருவன் மட்டும் தேர்ச்சி பெற்றதனால் என்பாட்டி, தந்தை, ஆசிரியர்கள் யாவர்க்கும் பெரு மகிழ்ச்சி. மாணவர் முதல் யாவர்க்கும் இனிப்பு வழங்கினேன். - - விடுமுறை நாட்களில் வில்லியனுர் கோவிலில் உள்ள திருக்குளமும் தெற்கே ஓடும் சங்கராபரணி ஆறும் ஆஎன்னால் என்னென்ன தொல்லைகள் பட்டனவோ? அவற்றை நினைத்துப் பார்க்கின் வெட்கமும் மகிழ்ச்சியும் விரிவான் போல் தோன்றுகிறது. அது அந்நாள் இளமைத் துடுக்கின் இனிய விருந்து. - அடுத்த நான்கு ஆண்டும் தொடர்ந்து படித்து வந்தேன். துடுக்குத்தனம் மிகுதியாக இருந்தும் படிப்பில் மட்டும் என் ஆசை வளர்ந்து கொண்டே வந்தது. காரணம் அடுத்தத் தேர்வு முழுக்க முழுக்க பிரெஞ்சு மொழிப் ஆாடங்கள். கணக்கு, கட்டுரை, சொல்வதெழுதல், இலக்கணம்,