பக்கம்:எழில் விருத்தம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 - வாணிதாசன் துக்கி விளையாடிய நினைவு என்னுள் பசுமையாக நிலைத்திருக்கின்றது. தந்தையைப் போலவே திருமுடி சேதுராமன் அவர்களும் தமிழ்ப் பற்ற்ோடும் பண்பாட்டோடும் பிறர்க்கு த.வி வாழும் பெற்றியை நினைத்துப் பார்க்கின் என் உள்ளம் பேருவகையடைகிறது. நான் கல்வே கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். என்னோடு என் பிறந்த ஊராகிய வில்லியனுளில் இருந்து செட்டியார் பிள்ளையாண்டான் ஒரு வரும் படித்துக் கொண்டிருந்தார். பெயர் நினைவில் வரவில்லை. எங்களுக்கென்றே இரண்டு மேசைகள் நாற்காலிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. மாடியில் சிறு சிறு தொட்டிகளில் இரோசாச் செடிகள் பூத்துக் குலுங்கும். அப்பூக்களை இட்டு வீட்டில் கடவுளை வணங்கிய பின்னரே செட்டியார் காலை உணவருந்துவார். மொட்டை மாடியில் கீற்றுக் கொட்டகை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும்; அதில் தான் இரவு உணவுக்குப் பின் திருமுடி நடராச செட்டியார் படுக்க வருவார். எங்கள் அறையை நோட்டமிடுவார். என்னோடு என் ஊர்க்காரர் ஒருவரும் தங்கியிருந்தார். ஆனால் அவர் பயின்ற கல்விக் கூடத்தில் முழுக்க முழுக்கப் பிரெஞ்சு வகுப்புகளே நடக்கும். அது Collage colonial ஆகும். இரவில் நாங்கள் படிக்கவில்லை யென்றால் கடுமையான அன்புக் கட்டளைகள் பிறப்பிப்பார். அறிவுரைகள் தருவார். எனக்கு அவர்மீது அளவற்ற பற்று ஏற்பட்டது. தொடர்ந்து கல்வே கல்லூரியில் பயின்றேன். . . . கல்லூரியில் பிரெஞ்சு, தமிழ் வகுப்புகள் தவிர ஆங்கில வகுப்புகளும் நடக்கும். ஆங்கிலப் பாடவேளையில் வகுப்பை விட்டு மறைந்து விடுவேன்.