பக்கம்:எழில் விருத்தம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 வாணிதாசன் அவர் படித்து வந்த அந்தத் தேர்வுக்கு இரண்டு வாரத்திற்குள் பணம் கட்டி விண்ணப்பிக்க வேண்டும். எனக்கும் அத்தேர்வெழுத விருப்பம் உண்டாயிற்று. அத்தேர்வில் தமிழோடு பிரெஞ்சும் சரிபாதி கலந்திருக்கும். என் விருப்பத்தை என் தந்தையாரிடம் கூறினேன். அவர் கண்டிப்பாக மறுத்து விட்டார். மனச்சோர்வோடு புதுவைக்குத் திரும்பினேன். எனக்குப் புகலிடம் அளித்த திருமுடி நடராச செட்டி யார் என் மனநிலையைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அவர் என் மீது மிகுந்த பற்றுடையவர்; தன் பிள்ளைகளில் ஒருவனாக என்னை பெண்ணிப் பாதுகாத்தவர். மாலை கல்லூரியிலிருந்து திரும்பி வந்தபோது பரிவாக என்னை அழைத்து, நான் நேற்றிலிருந்து கவனிக்கிறேன் உன் குறும்புத்தனமும் குறுநகையும் காணவில்லையே? என்னடா உனக்குக் கவலை? உன் தந்தைக்கும் உனக்கும் தகர றா?' என்று பரிவாகக் கேட்டார். நான் மறுமொழி ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டேள். அவன் இரவு மாடிக்குப் படுக்க வரும்போது வழக்கம்போல் என் அறையை நோட்டம் விட்டார். நான் படிக்காமல் ஏதோ சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை அவர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். கட்டிலில் படுத்துக் கொண்டே என்னை அழைத்தார். 'என்னடா, நான் இரண்டு நாட்களாகக் கேட்கிறேன்: ஒன்றும் பதில் சொல்லாமல் இருக்கிறாய். என்னிடம் சொல்லக் கூடாதா? அவ்வளவு பெரிய இரகசியமோ என்றார்." - - அவரது பரிவான சொற்களின் முன் என் நெஞ்சம் நெகிழ்ந்தது. யாவற்றையும் அவருக்கு விளக்கிக் கூறினேன். எனக்குள்ள பிரெஞ்சு மொழியறிவு இத்