பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2 இயல், வரலாறு, பொருளாதாரம், வாணிபம், சாதனை புரிந்தவர்களது சரிதை, பிரயாண அனுபவங்கள், கலைகள் போன்ற பல அம்சங்களையும் - பல்வேறு ருசிகளுக்கும் ஏற்ற

பலவிதமான விஷயங்க? யும் - பத்திரிகைகள் தரவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அத்துடன், வாசகர்களை குறையாத எண்ணிக்கையில் வைத்துக்கொள்வதற்காகவும் - வாசகர்களின் எண்ணிக்கையை மேலும் பெருக்குவதற்காகவும், கதைகள் பத்திரிகைகளில் இடம் பெறலாயின. இந்த நோக்கத்திற்குத் தொடர்கதை"கள் மிகுதியும் உதவக்கூடும் என்பதால், ஒவ்வொரு பத்திரிகையும் (நாளிதழ் கூட கதைச்சுவை நிறைந்த தொடர்கதையை இன்தியமையாத அம்சம் ஆக்கிக் கொண்டது. வாசகர் பெருக்கமும், வாசகர்களின் ருசிகளும், படிப்பு ஆர்வமும் அதிகரிக்கவும், செய்திப் பத்திரிகைகளோடு, பல விதமான சஞ்சிகைகளும் அதிகம் அதிகமாகத் தோன்றி வளர்வது சாத்தியம் ஆயிற்று. ஆழ்ந்த கல்வி மூலம் அறிவொளி பெற்றவர்களும், சிந்தனைத் திறனை வளர்த்துக் கொண்டவர்களும், வாழ்க்கை பற்றிய உண்மையைத் தேட முயன்றவர்களும், சமகால மனித வாழ்வில். சமூக அமைப்பில், நீடித்து நிலவுகிற குறைபாடுகளை உணரத் தவறவில்லை. மனிதர்கள் சந்தோஷமாக, வளத்தோடு, வாழ வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகிருர்கள். ஆனால், மனித வாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக இல்லை. அப்படி வாழ்வதற்கு சமூக அமைப்பு முறைகளும், பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைமைகளும் துணைபுரியவில்லை. இதை