பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11.


வளர்ந்தது. ஆழ்ந்த இ லக் கி ய த் தி ன் மீது அதற்கு நாட்டம் கிடையாது. சமூகத்தில் நிலவுகிற வறுமை , துன்ப துயரங்கள், சோக நிகழ்வுகள், கொடுமைகள் முதலியவற்றை எழுத்திலே பிரதிபலிக்கத் தேவையில்லை என்பதே அதன் கொள்கை. வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்ப்பது : இன்பங்களை எடுத்துக் காட்டுவது; எல்லோரும் சந்தோஷமாக இருக்க உதவுவது ; கதைகள் எப்போதும் இன்ப முடிவையே கொண்டிருப்பது- இவையே விகடன் மனோபாவமாகும்.

இந்தப் போக்கை நன்கு வளர்க்கும் முன்னோடி யாகவும் வழிகாட்டியாகவும் விளங்கினார் ஆனந்த விகடன்’ ஆசிரியர் பொறுப்பிலிருந்த கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி. அவர் மிகுந்த திறமை படைத்தவர். அரசியல், பொருளாதாரம், சமூக விஷயம், சங்கீதம் முதலிய சகல விஷயங்களையும் சாதாரண வாசகருக்கும் புரியும் விதத்தில் எளிய நடையில், சுவாரஸ்யமாக எழுதக் கூடிய ஆற்றல் அவருக்கு இருந்தது. இவற்றுடன் சுயமான நகைச்சுவையும் அவர் எழுத்தில் கலந்து கொண்டது. கதைச் சுவை உள்ள ரசமான கதைகளையும், வாசகர்களை ஈர்க்கும் தொடர் கதைகளையும், அழகான நடையில் அவர் எழுதினார். தமிழ் நாட்டில் பத்திரிகை படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை பெருகுவதற்கு கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தியின் எழுத்துத் திறமையும் ஒரு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

அத்துடன், பத்திரிகை பரவலாகவும் வேகமாகவும் பரவுவதற்காக அநேக வியாபார உத்திகளை அதன் அதிபர் எஸ். எஸ். வாசன் கையாண்டார். ஒவ்வொரு பிரதியிலும் அதிர்ஷ்டஎண் என்று நம்பர் குறித்து, தேர்ந்தெடுத்த சில எண்களுக்கு அதிர்ஷ்டப்பரிசு’ என்று பணம் அளித்தல்