பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17


காந்திஜீயின் கொள்கைகளைப் பின்பற்றியவர்களில் பெரும்பாலோர் அவற்றை ஒதுக்கிவிட்டனர்: நடைமுறைக்கு ஒவ்வாதவை வாழ்க்கை முன்னேற்றத்துக்குக் - கட்டுபடியாகாதவை. என்று கருதி, அவற்றை மறக்கலாயினர்.உண்மையாக அவற்றின் மீது பற்றுக்கொண்டவர்கள் இச்சுழிப்புகளிலிருந்து விலகி ஒதுங்கி வாழலாயினர்.

ஆளவந்தவர்கள், முன்காலத்தைப் போல, மக்களோடு தொடர்பு கொள்ளவும் மறந்தனர். சமூகசீர்திருத்தம் மக்கள் கலாச்சாரம், தனி மனித உயர்வு போன்ற விஷயங்கள் எப்பவாவது அலங்காரமாகப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் தேவையானவை என்ற மனநிலை பரவலாயிற்று.

பத்திரிகைகளையும் பத்திரிகையாளர்களையும் இந்தப் போக்கு பாதித்த்தில் வியப்பில்லை.

லட்சியம் , கொள்கைப் பற்றுதல் என்ற நோக்கில் பத்திரிகைகளை நடத்தி நஷ்டப்பட்டுக் கொண்டிருப்பது சரியல்ல; தொழில்முறையிலும் பத்திரிகைகளை லாபகரமாக நடத்த முடியுமா என்று பார்க்கவேண்டும் என்ற எண்ணம் பத்திரிகை நடத்துபவர்களிடையே வலுப்பெற்றது. பொழுது போக்குக் கதைகள், சினிமா விஷயங்கள் மூதலிய ஜனரஞ்சகமான விஷயங்களை அதிகம் அதிகமாகத் தருகிற செயல்முறை வளரலாயிற்று.

மிகுதியாக முதலை ஈடுபடுத்தி, தொழில் துணுக்கங்களைக் கையாண்டு, கணிசமான லாபம் பெற்றுத் தரக்கூடிய சாதனமாகப் பத்திரிகையும் விளங்கமுடியும் - தமிழ்ப் பத்திரிகையையும் வெற்றிகரமான தொழில் முயற்சியாக ஆக்க வேண்டும் - என்று தீர்மானித்த பண அதிபர்கன் பத்திரிகைத் துறையில் துணிச்சலோடு ஈடுபட்டார்கன்.