பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23


ஸ்நாக்ஸ் - அவர்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது. ரோடு ஒரத்தில் நின்றும், பிளாட்பாரங்களில் நின்றும், மெதுவாக நடந்தபடியும் கொரிப்பதற்கு ஏற்ற நொறுக்குத் தீனி வகைகளுக்கே இன்று கிராக்கி, - பத்திரிகை விஷயங்களிலும், இதே தன்மை காணப்படுகிறது. ஹெவி விஷயங்களை வாசகர்கள் வரவேற்பது கிடையாது. லேட்டான சமாச்சாரங்கள் - நொறுக்குத் தீனி போன்றவை - கொரிப்பதுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக - நிறைய வேண்டும். இன்றையப் பத்திரிகைகள் அவற்றை சப்ளை செய்கின்றன ..

பத்திரிகைகளின் தேவைகளுக்குத் தக்கபடி சரக்குகளைத் தயாரித்துக் கொடுப்பதில் உற்சாகம் காட்டுகிற சரக்கு மாஸ்டர்கள் ஆகிப்போனார்கள் எழுத்தாளர்கள்.

அவர்களுக்கு தாராளமாகவே பணம் கிடைக்கிறது பத்திரிகைகளிலிருந்து.

வாசகர்களைக் கவர்ந்து இழுப்பதற்கும், அவர்களை விடாது பிடித்து வைத்திருப்பதற்கும், தொடர்கதை துணை புரிகிறது. காலப்போக்கில், ஒவ்வொரு பத்திரிகையும் மூன்று, நான்கு தொடர்கதைகளும், மற்றும் சில தொடர் அம்சங்களும் வெளியிடுவதை வழக்கமாக்கிக் கொண்டது. தினப்பத்திரிகைகளும் 'தொடர்கதை' பிரசரிக்கும் வழக்கத்தை மேற்கொண்டுவிட்டன.

தொடர்கதைகள், வாசகர்களின் ஆவலைத் தூண்டும் விதத்தில், சம்பவ அடுக்குகள், அடுத்து என்ன நிகழும் என எதிர்பார்க்க வைக்கும் சஸ்பென்ஸ், கொலை-கொள்ளை-காதல் என்ற பெயரில் காம விவரிப்புகள், பெண் அங்க வர்ணனை கள் முதலிய கிளுகிளுப்பூட்டும் விஷயங்களை தாராள மாகக் கொண்டிருக்க வேண்டும் என்பது எழுதப்படாத