பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27


வளர்ச்சியும், வாழ்க்கை மேம்பாடுகளும், சமூக மாற்றங்களும் பெற்றுவிடாது, தற்கால அமைப்பு முறைகள் அப்படி அப்படியே இருக்க வேண்டும் என்பது மக்களை நுகர்வோர் ஆக மாற்றிப் பலனடைகிற தொழில் அதிபர்கள் (முதலாளிகள்) நோக்கமும் செயல் முறையுமாம்.

இதை கவனித்துக் கொள்ளும் விதத்திலேயே சகல ரகமான மக்கள் தொடர்பு சாதனங்களும் (மாஸ் மீடியா) உலகெங்கும் பணஅதிபதிகளால் பயன்படுத்தப்படுகின்றன. பத்திரிகைகளும் இவற்றில் ஒன்று.

தமிழ்நாட்டிலும் இதே முறையில் தான் பண அதிபர்களின் பத்திரிகைகள் செயலாற்றிக் கொண்டிருக்கின்றன.

தற்காலப் பத்திரிகைகள், வாசகர்களுக்குத் தேவையானவாசகர்கள் விரும்புகிற - அனைத்தையும் கொடுக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, அவற்றை நடத்துகிற ஒரு சிலரது விருப்பு வெறுப்புகளையும் வக்கிரப்போக்குகளையும் மக்கள் மத்தியில் பரப்பியவாறு இருக்கின்றன. நாட்டின் கலைகள், கலாச்சாரம், மக்களின் பண்பாட்டு நலம், தனி மனித ஒழு க் க நெறிகள் முதலிய பலவற்றையும் சிதைத்துச் சீர்குலைத்து வருகிற விஷயங்களையே, மக்களுக்குப் பி டி த் த - ஜன ரஞ்சகமான- விஷயங்கள் என்று பத்திரிகை உற்பத்தியாளர்கள் வியாபாரச் சரக்குகளாக்கி விற்பனை செய்து கொண்டிருக் கிறார்கள்.

அரசியல் முதல், சமூக மக்களின் கவனத்தைக் கவர்கிற சகல விஷயங்களும் பத்திரிகையின் விற்பனையை அதிகப்படுத்த உதவுகிற சரக்குகள் என்ற தன்மையிலேயே எடுத்தாளப் படுகின்றன. மக்களில் சகலவிதமானவர்களின் பல்வேறு ருசிகளையும் திருப்திப்படுத்துகிற விதத்தில் சோதிடம்,