பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28


ஆன்மீக விஷயம், கோயில் புராணம், சினிமா மற்றும் தன் உயர்வுக்கு வழிகூறும் (செல்ஃப்-இம்ப்ரூவ்மென்ட்) உபதேசக் கட்டுரைகள், பயண அனுபவங்கள், மருத்துவ விஷயங்கள் எல்லாம் சேர்க்கப்படுகின்றன. இதே நோக்கில் தான் குறிப்பிட்ட சில எழுத்தாளர்களது கதைகளும் இணைக்கப்படுகின்றன.

திறமை வாய்ந்த எந்தத் தனி ஒரு எழுத்தாளரையும் நம்பிப் பத்திரிகை முதலாளி தனது பத்திரிகையை நடத்த வில்லை. ஆனுல், சிறு பத்திரிகைகள் மூலமோ, புத்தகப் பிரசுரம் வாயிலாகவோ, நாட்டில் கவனிப்புக்கு உரிய எழுத்தாளராகப் பெயர் பெற்று விடுகிறவர்களின் உழைப்பை உடனடியாக தனது பத்திரிகைக்குப் பயன்படுத்திக் காள்வதற்குத் தொழிலதிபர் தயங்குவதும் இல்லை.

அந்தப் படைப்பாளிகளின் எழுத்து மக்கள் மத்தியில் கவர்ச்சி குன்றி விட்டது என்று தெரிந்த உ டனேயேபத்திரிகை அதிபர்கள் அவ்வெழுத்தாளர்களை ஒதுக்கிவிடத் தயங்கவும் மாட்டார்கள்.

பத்திரிகை வரலாறும், குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் வளர்ச்சியும் சரிவும் இதை நிரூபித்தவாறு இருக்கின்றன.

எழுத்தாளர்கள், பத்திரிகைகள் தருகிற அன்பளிப்புக் காகவும், அப்பத்திரிகைகள் மூலம் வந்து சேர்கிற புகழின் போதையினுலும், பத்திரிகைகளுக்குத் தேவைப்படுகிற வகைகளில் எழுதிக் கொடுக்கத் தயாராகி விடுகிறார்கள்.

முற்காலத்தில் பத்திரிகைதர்மம் என்று சில உயர்ந்த கொள்கைகள் கடைபிடிக்கப்பட்டன. அதே மாதிரி எழுத்தாளர் தர்மம் எழுத்தாளன் கர்வம்' என்றும் சிலசில போக்குகள் கையாளப்பட்டு வந்தன. அவற்றைக் காப்பாற்றுவதற்காக,