பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

பயனுள்ள, நல்ல, உருப்படியான காரியம் எதையும் சாதிக்க முடிவதில்லை.

தனித்த பார்வை, ஏதேனும் தத்துவச் சார்பு, புதிய அறிவார்த்த விஷயங்களை கொடுக்கும் அவா முதலியவற்றோடு செயல்படுகிற சிறுபத்திரிகைகளில் பல குழு மனப்பான்மை கொண்டுவிடுகின்றன. எழுத்தாளர்களிடையே. இயல்பாகக் காணப்படுகிற ‘Groupism’ (குழுத் தன்மை-கோஷ்டி மனப்பான்மை) இப்பத்திரிகைகளிலும் பிரதிபலித்து, ஒவ்வொன்றும் தனிமைப்பட்டுப் போகின்றன. தனிநபர் வழிபாடு; படைப்புகளை விமர்சிப்பதை விட படைப்பாளியைத் தாக்குகிற போக்கு; புதிய விஷயங்களைத் தருகிறோம் என்று சாதாரண வாசகருக்குப் புரியாத சமாச்சாரங்களை அச்சிடுகிற இயல்பு போன்றவை இவற்றின் செயல் முறைகள் ஆக இருக்கின்றன.

இக் குறைபாடுகளையும் மீறி நல்ல சிறுகதைகளையும், நல்ல கவிதைகளையும், சிந்தனையை வளர்க்கக் கூடிய கட்டுரைகளையும் சிறுபத்திரிகைகள் தந்திருப்பது மகிழ்ச்சிக்கு உரியதாகும்.

சிறு பத்திரிகைகளின் ஆசிரியர்களாக விளங்க ஆசைப்படுகிற இளைஞர்கள் பொதுவாக, எழுத்தாளர்கள் ஆக வளர்ந்து பிரகாசிக்க விரும்புகிற யாருமே-முதலில் அதற்காகத் தங்களைத் தாங்களே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்; தகுதிப்டுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்கு, ஏராளமாகப் படிக்க வேண்டும். அறிவையும் சிந்தனைத் திறனையும் வளர்த்துக் கொள்வதற்காக நல்ல நல்ல புத்தகங்களைப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். தற்காலத் தமிழ் எழுத்தாளர்களது எழுத்துக்களை