பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை


முதலில் நான் வாசகன். அப்புறம் தான் எழுத்தாளன்.

1933 முதல், எனக்குக் கிடைக்கும் பத்திரிகைகள் புத்தகங்கள் அனைத்தையும் படிப்பதில் நான் ஆர்வம் கொண்டேன். இப்போதும் படித்துக் கொண்டிருக்கிறேன்.

நாற்பத்து ஏழு வருடங்களாக நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்

'படிப்பதில் உங்களுக்கு அலுப்பு ஏற்படவில்லையா?' 'எழுதுவதில் உங்களுக்கு சலிப்புத்தட்டவில்லையா?' - இப்படி அவ்வப்போது என்னை கேட்கிறார்கள், பெரிய படைப்பாளிகளும் இளைய தண்பர்களும்.

படிப்பது எனக்குப் பொழுது போக்கு அல்ல. எழுதுவது எனக்கு வேலை இல்லை.

படிப்பது - எழுதுவது - ஊர் சுற்றுவது என்பதை ஒரு வாழ்க்கை முறையாக வரித்துக் கொண்டவன் நான்.

ஒருவனுடைய வாழ்க்கையே அவனுக்கு. அலுக்குமானால், சலித்துப் போகுமானால், அப்புறம் அவன் வாழத் தகுதியற்றவன் ஆவான். மரணம் தான் அவனுக்கு விடுதலை அமைதி -- அளிக்க முடியும்.