பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திற்காலத்தில் பத்திரிகைகள் நிறைய வருகின்றன. நாளிதழ்கள், வாரப் பத்திரிகைகள், மாதம் இருமுறை வெளியீடுகள், மாத சஞ்சிகைகள், மாதம் ஒரு நாவல் . வெளியீடுகள். மற்றும், எண்ணற்ற சிறு பத்திரிகைகள், காலாண்டு ஏடுகள். . எழுத்தாளர்களும் - அதிகம் பேர் இருக்கிளுர்கள். அவர்கள் எல்லோருடைய எழுத்துக்களும் பத்திரிகைகளில் இடம் பெற்று விட முடிவதில்லை. . குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் எழுத்துக்கள், ஒரே சமயத்தில், பல பத்திரிகைகளில் வெளிவருவதைக் காணமுடிகிறது. *. . அந்த குறித்த சில எழுத்தாளர்களின் எல்லா விதமான எழுத்துக்களும் பத்திரிகைகளில் அச்சாகி விடும் என்று சொல்வதற்கில்லை. அதாவது, அவர் தனது இஷ்டம் போல, தனது ஆற்றலைக் காட்டுவதற்காகவோ, இந்த மாதிரி எழுத்துக்கள் தான் மக்களுக்கு நல்லது என்ற நோக்குடனே" எதையாவது எழுதினல், அவை பத்திரிகைகளில் பிரசுரமாகும் என்ற நிச்சயம் எதுவும் இல்லை. பத்திரிகைகளின் தேவைக்குத் தக்கபடி, தங்கள் வாசகர்களுக்கு 75ನು೧ பிடிக்கும் என்று பத்திரிகை நடத்து கிறவர்கள் நிர்ணயித்திருக்கிருர்களோ அந்த அளவுகளுக்கு -