பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

கொண்டிருப்பவர்கள் – எழுத்தாளர்களுக்கு ஆதரவு , தருவதையும், அவர்களை ஒதுக்கி விடுவதையும், காலத்தின் தேவைக்குத் தக்கபடி செய்வதில் கருத்தாக இருக்கிறார்கள்.

ஆகவே, வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் பத்திரிகை அதிபர்களின் நல்லெண்ணத்தைத் தொடர்ந்து பெற்றிருப்பதிலும், அதற்காக சம்பந்தப்பட்ட பத்திரிகை ஆசிரியரின் தயவை அடைவதிலும் கவனம் செலுத்தி வர வேண்டியதும் அவசியமாகிறது.

இந்த விதமான ‘யுகதர்மங்களை’ பின்பற்ற விரும்பாதவர்கள் – கையாளத் தெரியாதவர்கள் – ஒதுக்கப்பட்டு விடுகிறார்கள்; பின்தங்கிப் போகிறார்கள்.

இவ்விதம் எழுத்துத்துறையில் வெற்றிகரமாக முன்னேற நேர்த்திருக்கிற எழுத்தாளர்களில் பலரும் எழுத்தை மட்டுமே நம்பி வாழ்கிறவர்கள் இல்லை என்பதும் ஒரு உண்மை ஆகும். நல்ல, நிரந்தரமான, மாத வருமானத்துக்கு வகை செய்கிற பெரிய வேலை ஏதாவது பார்க்கிற நபர்களாகத் தான் அவர்கள் இருக்கிறார்கள்.

இவர்களில் சிலர், வாழ்க்கை வசதிகளையும் சுகபோகங்களையும் அதிகப்படுத்திக் கொள்வதற்கு மேலும் பணம் தேவை; இப்படி எழுதுவதால் பணம் கிடைக்கிறது என்பதனால், பணத்துக்காகவே எழுதுகிறோம் என்று தயங்காது அறிவிக்கிறார்கள். சிலர் புகழ் போதையினால் ‘பத்திரிகை எழுத்துக்களை’ உருவாக்குவதில் ஆர்வமும் உற்சாகமும் உடையவர்களாக இருக்கிறார்கள்.

எழுத்தை மட்டுமே நம்பி, அதையே ஒரு தொழிலாக ஏற்றுக் கொண்டவர்கள் பத்திரிகைகளின் தேவைகளுக்குத்