பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64


பணத்துக்காக எழுதுகிறேன், புகழுக்காக எழுதுகிறேன், என் மன அரிப்பை தீர்த்துக் கொள்வதற்காக எழுதுகிறேன் என்று சொல்கிற எழுத்தாளர்களும் இருப்பார்கள்.

படிப்பவர்களுக்குக் கிளுகிளுப்பூட்டுவதற்காக எழுதுகிறேன், பிறருக்குக் கோபம் உண்டாக்குவதற்காக எழுதுகிறேன், பிறருக்கு வழிகாட்ட எழுதுகிறேன், சமூகம் சீர்திருந்த வேண்டும் என்பதற்காக - எழுதுகிறேன். மக்களுக்கு சிந்தனை - விழிப்பு ஏற்படுத்துவதற்காக எழுதுகிறேன். இப்படியும் சொல்வார்கள் பற்பலர்.

பொதுவாக அவரவர் இயல்புகளின்படி, அவரவர் நோக்கிற்கும் போக்கிற்கும் ஏற்ப, எழுத்தும் வித்தியாசப்படும். . . .

என்றாலும், எழுத்து வகைகளில் பளீரெனப் புலனாகக் கூடிய போக்குகள் இரண்டு உண்டு.

ஒன்று - தனிமனித நோக்கு. அது அகவயமான போக்கைதக் கொண்டிருக்கும். தனி நபரின் உள்ளத்து உணர்ச்சிகள், ஆசைகள், கனவுகள், ஏக்கங்கள், விரக்தி வேதனை. அகஉளைச்சல்கள், வக்கிரத் தன்மைகள் முதலியவற்றை சித்தரிப்பது,

இரண்டாவது - சமுதாயப் பார்வை, (சமூக நோக்கு ) பரந்த நோக்கில் சமூக பிரச்சனைகளை எடுத்துச் சொல்வது. ஏழை எளியவர்கள், வாழ்க்கை வசதிகள் வஞ்சிக்கப்பட்டவர்கள், அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருப்ப வர்கள், வாழ்வின் அடி மட்டத்தில் அவதிப்படுவோர் முதலியவர்களின் வாழ்க்கை நிலைக்கான உண்மைக் காரணங்களை அவர்களுடைய பிரச்னைகளை, எழுச்சிகளை, போராட்டங்களை