பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

 பத்திரிகைகளின் நச்சுத் தன்மைகளை வளர்ப்பதில் கருத்தாக இருக்கிருர்கள்.

எழுத்து மனிதனை மனிதனாக வாழ வகை செய்ய வேண்டும். மனிதகுல மாண்புகள் போற்றிப் பாதுகாக்கப்படுவதற்குத் துணை புரிய வேண்டும். மனிதர்களும் சமூகமும் மேம்பாடு அடைய உதவ வேண்டும். மனித வாழ்க்கை அன்பும் அமைதியும் ஆனந்தமும் நிறைந்ததாக அமைவதற்கு எழுத்தாளர்களின் படைப்புக்கள் தம் பங்கை ஆற்ற வேண்டும்.

எழுத்தாளனும் சமூக மனிதன் தான். அவனுக்கும் சமூகப் பொறுப்பும் கடமைகளும் உண்டு. சமூகத்தைக் கெடுத்து நாசமாக்கும் விதத்தில் எழுத்தாளனின் திறமை செயல்படுவது சமூகக் குற்றமேயாகும். இந்த உணர்வு எழுத்தாளர்களுக்கு வேண்டும்.



எழுத்து உலகில் முன்னேற விரும்புகிறவர்களுக்கும், எழுத்தில் புதுமை படைக்கத் துடிக்கிற திறமைசாலிகளுக்கும், ஆழ்ந்த - கனமான - சிந்தனைக்கு வேலை கொடுக்கிற எழுத்து முயற்சிகளில் ஈடுபடுவோருக்கும் தற்காலப் பத்திரிகைத் துறை உற்சாகம் தருவதாயில்லை. அதுசரி; புத்தக வெளியீட்டுத் துறை இவர்களுக்கு நம்பிக்கையும் ஆதரவும் தரக்கூடிய தன்மையில் இருக்கிறதா?