பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

 அந்தப் புத்தகத்தின் விலை அதிகமாகத் தான் அமைகிறது. அப்படியும், அதை வாங்கிப் படித்து மகிழக் கூடிய ரசிகர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் . சில தொடர்கதைகள், இரண்டு மூன்று பாகங்களாகப் புத்தக வடிவம் பெறுகின்றன, பத்திரிகையில் படித்து மகிழ்ந்த கதையை, அதிக விலை கொடுத்து, புத்தகமாக வாங்கிப் படிக்கவும் வாசகர்கள் தயாராக இருக்கிறார்கள். அதனால் தானே பதிப்பகத்தார்கள் ஆர்வத்தோடு அவற்றை அவசரம் அவசரமாக புத்தகங்களாக்கி வெளியிடுகிறார்கள் ?

அதே வேளையில், புதுமையாகவும் தரமானதாகவும், ஆழ்ந்த வாழ்க்கை உண்மைகளை எடுத்துக் கூறி சிந்திக்க வைக்கும் இலக்கிய முயற்சிகளாகவும் எழுதப்படுகிறஎழுத்துக்கள் - பத்திரிகைகளில் அச்சாகி வந்திருத்தபோதிலும் - பிரசுரகர்த்தர்களால் விரும்பி ஏற்கப் படுவதில்லை.

அப்படியே நட்புக்காக - அளாகக்காக - பிரசுரித்து வைக்கலாமே என்ற தயவுடன் அவற்றில் சிலவற்றை, புத்தக வெளியீட்டாளர்கள் ஏற்றுக் கொள்ளலாம். அவர்கள் ஏற்றுக் கொண்ட போதிலும், அவை உடனடியாக புத்தகமாக வெளி வந்து விடும் எனும் உறுதி எதுவும் இல்லை.

அநேக எழுத்தாளர்களின் எழுத்துக்கள்-பத்திரிகைகளில் வந்த அச்சுப் பிரதிகளாகவோ, அச்சு வடிவம் பெறாத கையெழுத்துப் பிரதியாகவோ - பதிப்பகத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகும், புத்தக வடிவம் பெறுவதற்கு மூன்று அல்லது நான்கு வருடங்கள் கூட எடுத்துக் கொள்கின்றன