பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75


அறிவிக்கிற போது, நிலைமைகள் சரியாக இல்லை, உற்சாகம் தாரக் கூடியவாக இல்லை என்பது புரியும்.

பத்திரிகைகளில், ஒரு சிலவற்றைத் தவிர, பெரும் பலவும் உயிர் வாழ்வதற்கே திணறிக் கொண்டிருக்கின்றன. ஆரம்பித்து விட்டோமே; நிறுத்தக் கூடாது; நிறுத்துவது கவுரவம் இல்லை என்ற தற்சிறப்பு மோகத்துடனேயே அநேகர் தங்கள் பத்திரிகைகளை தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருகிறார்கள்.

பத்திரிகை உலகின் சிரமங்களை, நஷ்டங்களை, ஏமாற்றங்களை தெரிந்து கொண்டிருந்த போதிலும், தங்களால் ஏதோ பிரமாதமாகச் சாதித்து விட முடியும் - தங்கள் பத்திரிகை வெற்றிகரமாகப் போகும் - என்றொரு தன்னம்பிக்கையோடும் தற்பெருமை மயக்கத்தோடும் அநேகர் புதுசு புதுசாகப் பத்திகைகளை ஆரம்பிக்கிறார்கள்.

குறுகிய காலத்திலேயே உண்மை நிலை அவர்களுக்கு அறிவு புகட்டி விடுகிறது. அவர்களுடைய பத்திரிகைகள் காலம் தவறாது வெளிவர இயலாதனவாகி, விரைவிலேயே நின்றும் போகின்றன.

இவ்வளவு பத்திரிகைகளும், இவ்வளவு புத்தக வெளியீட்டு வாய்ப்புகளும் இருப்பதனால், எழுத்தாளர்களின் நிலைமையும் முன்னைவிட இப்போது மேம்பட்டிருக்க வேண்டும் என்ற நினைப்பே பலருக்கும் எழக் கூடும்.

மேலும், கவர்ச்சிகரமான பரிசுத் திட்டங்களும் விருது வழங்கல்களும் இருக்கின்றனவே!