பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


y o அறிந்து கொள்ள வேண்டும் எனும் அவா மனிதருக்கு இயல்பானது. தம்மைச் சுற்றிலும் - வீதிகளில், ஊரில், இதர இடங்களில், நாட்டில், உலகத்தில் - என்ன நடந்தது, நடந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆசை பொதுவாக எல்லோருக்கும் இருக்கிறது. இந்த அடிப்படை உணர்வை திருப்தி செய்வதற்குப் பத்திரிகைகள் உதவுகின்றன. ஆதியில், வெறும் செய்திகளை மட்டுமே சேகரம் செய்து தந்து கொண்டிருந்த பத்திரிகைகள், பின்னர் அச்செய்திகள் மீது எழுகிற தங்கள் (பத்திரிகை ஆசிரியரின், மற்றும் பத்திரிகை நடத்துகிறவர்களின்) அபிப்பிராயங்களை அழுத்தமாக அறிவிக்க முன்வந்தன. இதன்மூலம், வாசகர்கள் மத்தியில் தாக்கம் ஏற்படுத்தி, தங்களுக்கு சாதகமான எண்ணங்களை வளர்ப்பதற்கு பத்திரிகைகள் நல்ல சாதனங்கள் ஆ க க் கூ டு ம் என்ற நிலை உருவாயிற்று. மக்களிடையே பத்திரிகை படிக்கும் பழக்கம் வளர வளர, அவர்களுக்கு வெறும் செய்திகள் மட்டுமே போதுமானதாக இருக்கவில்லை என்று தோன்றியது. ஆகவே அரசியல், சமூக