பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா



அபிப்ராயம் என்ன என்பதை அறிந்து கொள்ள இன்னும் எதிர்பார்த்து, காத்து, நிற்க வேண்டி இருக்கிறது.

சரி, வசனத்தைப் பற்றி என்ன? கவிதையைப் படிப்பதால் கிடைக்கும் இன்பத்துக்குச் சமமாகவோ, அதற்கு அதிகமாகவோ வசனத்தைப் படிப்பதில் இன்ப அநுபவம் தங்ளுக்குக் கிடைப்பதாக பலர் உணர்ந்தார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் உலக கட்டுக்கதை இலக்கியங்களில் முக்குளித்து இருக்கிறவர்களுக்குக்கூட உரை நடை இலக்கியத்தை அளவிடுவது ஒரு இன்பகரமான செயலாகப் படவில்லை. உண்மை என்னவென்றால் , இலக்கிய உருவ வகைகளிலேயே இனிப்பாக இருப்பதும் இன்றைக்கு ஒரே மோகமாக அடிப்பதுமான நாவலும் சிறுகதையும் கூட, கவிதை ஆராய்ச்சியில் குணம் காணவும் விமர்சிக்கவும் தங்கள் பேனாக்களை ஒட்டுகிறவர்கள் கைகளில் பகுப்புப் பெறவே வழி இல்லை.

மேலே குறிப்பிட்ட இரண்டு இங்கிலீஷ் புஸ்தக மதிப்புரைகளுக்கு வெகு காலத்துக்குப் பின், கால் நூற்றாண்டுக்கு முன்பு, சிறுகதைத் துறையில் உரைநடைப் போக்குக்கு ஒரு புதிய வேகம் கிடைத்தது. நாவலுக்கு அது கொஞ்சம் பிந்திக் கிடைத்தது. 'மணிக்கொடி' என்ற பத்திரிகைப் பெயரைக் கொண்டு மதிக்கப்பட்ட 'மணிக்கொடி காலம்' என்ற காலப்பகுதியில், ஆழ் கருத்து எழுத்துக்களிலும் சிறுகதைச் சோதனைகளிலும் புதுப்பித்த முயற்சிகள் செய்யப்பட்டன. இந்தக் காலத்தில் சோதனையாளர்கள் படைப்பதோடு மட்டும் திருப்தி கொண்டு விடாமல், தங்கள் முன்னோடிகளான வ.வெ.சு., பாரதி இருவரையும் போல, சிறுகதையின் உருவம், உத்தி, விஷயம் இவைகளைப் பற்றி தங்களுக்குள்ளேயே விவாதித்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். இலக்கியத் திருட்டுகளையும் பற்றி அவர்களே தான் கத்தி, அம்பலப்படுத்தி, மேலோட்டமான, பாமரப் பிரியமான எழுத்துகளுக்கு மேலாகதங்கள் எழுத்துக்களைப் படிக்கச்செய்யவும், அவர்களே தான் போராட வேண்டி இருந்தது. எழுத்து பற்றி பல அம்சங்களையும் பற்றிய விவாதம் இன்றைக்கும் தொடர்ந்து தனிப்பட்ட சம்பாஷணைகளிலும், கோஷ்டிக் கூட்டங்களிலும் நடைபெற்றுவருகிறது.

96