பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

கடைசியில் திகில்பிடித்து வெளியே ஓடுகிறான் கூத்தரசு. டாக்டர் அம்பலவாணரைக் கலந்து ஆலோசித்த போது, வெண்ணிலாவின் முன்னால் ஒரு ராம படத்தைக் காட்டுகிறார் அவர். அதை உற்றுப் பார்த்துவிட்டு, உடம்பை யாரோ முறிக்கிறாப் போலதுடிதுடித்து பின் வீழ்கிறாள் வெண்ணிலா.

டாக்டர் அம்பலவாணர் கூத்தரசைத் தன் பூஜை உள்ளில் வைத்து ராமஜபம் செய்யச் சொல்கிறார். ஆனால் வெண்ணிலாவின் உடம்பு எரிகிறது. கூத்தரசு புலன்களுக்கெட்டாத அனுபவத்தை அனுபவிக்கிறான். அவன் கொள்கையைவிட்ட கோபத்தில் மூட்டையைக் கட்டிக் கொண்டு ஊருக்குப் போய் விடுகிறாள் வெண்ணிலா. ஆனால் அங்கும் அவள் உடம்பு தேறவில்லை. அந்த ஊர் டாக்டர் மூளையில் கட்டி புறப்பட்டிருக்கும் என்கிறார். அம்பலவாணர் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் உடம்பு வியாதியாகப் படவில்லை அது. ஆத்மாவைப் பேய் சூழ்ந்த நோயாகத்தான் அவருக்குப் படுகிறது. கூத்தரசு, டாக்டர் எல்லாருடைய முயற்சிகளையும் மீறி வெண்ணிலா சென்னைக்குப் போய் உடம்பைக் காட்டத் துடிக்கிறாள். அம்பலவாணரின் எக்ஸ்ரேயில் காணாத ஒரு மூளைக் கட்டி சென்னை டாக்டரின் எக்ஸ்ரேயில் தெரிகிறது. பேய்த் தீனி தின்கிற வெண்ணிலாவைப் படுக்க வைத்து மூளைக்கு ரணசிகிச்சை நடக்கிறது. ஆனால் மூளையில் கட்டியில்லை. வெண்ணிலாவின் உயிரைக் கடவுளிடமிருந்து பேய் காப்பாற்றி, உடம்பைவிட்டு எடுத்துக் கொண்டு போய்விடுகிறது.

ஆஸ்திகம், நாஸ்திகம் இரண்டு பிரிவிலும் கண்ணிழந்தவர்கள் உண்டு. அறிவுக்கு முன்னால் சுவர் எழுப்பிக்கொண்டு அப்பால் போகமாட்டேன், பார்க்க மாட்டேன் என்று மூட நம்பிக்கையில் உழைப்பவர்கள் ஆஸ்திகத்திலும் நாஸ்திகத்திலும் இருக்கிறார்கள். கிணற்றுத்தவளை மனப்பான்மை எங்கேயிருந்தால் என்ன? உண்மை மறைந்து விடுகிறது. இந்தப் போராட்டத்தை வல்லமையும் வேகமும் கொண்ட தன் நடையில் சொல்லுகிறார் வெங்கடராமன்.

‘உயிரின் யாத்திரை' வேறு புத்தகம், வேறு பாத்திரங்கள் கொண்ட கதை. ஆனால் இருட்'டின் தொடர்ச்சி என்று சொல்ல

104