பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

இடமிருக்கிறது. மனைவி மரணத்தறுவாயில் கிடக்கிறாள். கற்றி கடைசி அழுகையும் அழுதுவிட்டார்கள். திடீர் என்று கோபு என்ற ஒரு நண்பன்வந்து 'ராஜா, உன் ராணி பிழைப்பாள், எங்கள் வீட்டுக்கு மூன்றாவது வீட்டில் குடிவந்திருக்கிற சதாசிவம் சொல்லி விட்டு வரச்சொன்னார். வந்து அவரிடம் மருந்து வாங்கிப்போ’ என்கிறான். ராஜா ஓடிப்போய் சதாசிவத்திடம் அந்தக் கடுகளவு மருந்தை வாங்கிவந்து கொடுக்கிறான். எல்லாரும் கைவிட்ட உடம்பு தேறி இருவர் வாழ்விலும் உயிரூட்டம் பிறக்கிறது. சதாசிவத்தோடு நெருங்கிப் பழகும்போது அவனுடைய பூர்வ ஜன்மக் கதைகளைச் சொல்கிறார் சதாசிவம். போனஜன்மத்தில் அவனை மணக்க விருந்து, கடைசியில் எவனுடனோ ஓடிவிட்ட ஒரு பெண், இப்போது இந்த ஜன்மத்தில் சதாசிவத்துக்கு மனைவியாகிவிடுகிறாள். குணம் இன்னும் மாறவில்லை, போனஜன்மத்தில் தன்தந்தையாக இருந்தவர் சதாசிவம் என்று அவரிடமிருந்தே கேள்விப்படுகிறான் ராஜா. ஒரு கணம் அவருக்கு துரோகம் செய்யக்கூட அவன் மனம் பாய்ந்து சட்டென்று பின் வாங்குகிறது. ஆனால் அதற்கும் தூண்டுகிறவள் அவள்தான். கடைசியில் அவள் சதாசிவத்தின் பரமபக்தனைப் போல இருந்தகோபுவுடன் இன்பம் துய்க்கிறாள். ஓடிவிட்டாள் என்ற செய்தி கேட்டு, அவளைப் பார்க்கவந்த ராஜா, அவளை மீண்டும் சதாசிவத்தின் வீட்டில் காண்கிறான். ஆனால் சதாசிவம் உள்ளே பரமோனத்தில் ஆழ்ந்து கிடக்கிறார். அவளுடைய மயக்கை விலக்கிக் கொண்டு உள்ளே போனவன் சதாசிவத்தை சமாதி நிலையில் கண்டு, சாதாரண அறிவுக்கும் உயர்ந்த நிலைக்கும் எட்டாத பிரபஞ்ச ஒருமை நிலையில், அத்வைத வெள்ளத்தில் தானே மூழ்கிவிடுகிறான் ராஜா. சிவநிலையிலிருந்து மீண்டவன், தான்கண்டஎல்லையற்ற ஆனந்தம் பேரினபத்தின் ஒரு துளி என்று அவர் சொல்லி அறிகிறான்.

இலக்கியத்தின், முக்கியமாக கதையிலக்கியத்தின் பொருள் எப்படி இருக்கவேண்டும் என்ற விஷயம் பற்றி பலருக்கு கருத்து வேற்றுமை இருக்கலாம். அன்றாட ஆசாபாசங்கள், அதாவது சமூகப் பிராணியான மனிதனின் ஆசாபாசங்கள், லட்சியங்கள், குணங்கள் இவைகள்தான விஷயமாக இருக்க முடியும், வேண்டும் என்று கூடப் பலர் சொல்லலாம். என்னைப் பற்றிய வரையில் இந்த விதிகள் செய்யும் ஆசை, மனிதனுடைய எல்லையில்லாத சாதனைகளில்

106