பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்


வெங்கடராமன் கதைகள் தனி ரகம். அவருடைய பாஷையும் தனிதான். தனிமட்டுமல்ல. மிக உயர்ந்த ரகத்தைச் சேர்ந்தவை. பலபேருக்குத் தூண்டுகோலாக இருக்கிறவை. அந்தப் பலபேரில் நானும் ஒருவன் என்பதை பெருமையுடனேயே சொல்லிக் கொள்ள முடியும். அவருடைய மதிப்பை முழுவதும் அறிய அவருடைய சிறுகதைகளையும், மகாபாரதக் கதைகளை தன் சொந்தப் போக்கில் அவர் எழுதிய கதைகளையும் வாசிக்க வேண்டும். உணர்ச்சி முறுக்கேறிய முதல் கதைகளையும் ‘விக்ரகவிநாசன்' என்ற பெயரில் அவர் குரூரமாகச் சிரித்து எழுதிய கதைகளையும், இப்போது எழுதுகிற கதைகளையும் வாசித்தால்தான் அவரை முழுவதும் அறிய முடியும்.

உண்மையான எழுத்து ஆசிரியரின் மனத்தைச் சித்தரிக்கும். இந்த எளிய, பெரிய ரசமட்டத்தை வைத்துப் பார்த்தால், வெங்கடராமனின் கதை விஷயங்களுக்கு தனியிடமும் மதிப்பும் உண்டு. அதாவது மறுக்க முடியாத இடம்.

வானதிப் பதிப்பகத்தார் அழகாக இந்த இரண்டு புத்தகங்களையும் கொண்டு வந்திருக்கிறார்கள். நல்ல விஷயங்களில் அவர்களுக்கு உள்ள ஆசைக்கு இது ஒரு அத்தாட்சி.

EZHUTTHU

Edited and Published by C.S. Chellappa from
19-A, Pilliar Koil St., Triplicane, Madras - 5.

Printed by S. Ramanatha Rao for Central Press,
97, Big Street, Triplicane, Madras - 5.

107