பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

க.நா.சு.வைப்பொருத்த அளவில் “ஒரு படைப்பாளிக்கு கலை சம்பந்தமான பொறுப்பு மட்டுமே உண்டு; சமுதாயப் பொறுப்பு கிடையாது; கலைஞன் என்பவன் ஒரு தனித்தீவு; தன்னுடைய படைப்புமிகஉயர்ந்த சிகரங்களைநோக்கிச்செல்லவேண்டும்; உலக இலக்கியத் தரத்தை எட்ட வேண்டும்; கலைஞன் ஒரு சுதந்திர புருஷன்; அவனுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் கூடாது" என்பதே அவரதுஇலக்கிய கொள்கையின் அடிப்படையாகும்.

இந்தப் பார்வையில் தான் அவரது திறனாய்வுகள் அனைத்தும் அமைந்திருந்தன. எனவேதான்"நான் மணிக்கொடிக்காரன்அல்ல!" என்று அவர் கூறுவது வழக்கம்.

வேறுவிதமாகச் சொன்னால் மேலைய (ஆங்கில-அமெரிக்க) நாட்டு எழுத்தாளர்களான ஜேம்ஸ் ஜாய்ஸ், ஆடன், எலியட் போன்றோரே அவரது இலக்கியப் பார்வையை உருவாக்கியவர்கள் எனலாம்.

ஆகவே, தமிழில் புதிய இலக்கியம் வளர்வதற்கு மேற்கண்ட இலக்கியவாதிகளின் படைப்புகளையே இவர் அளவு கோலாய் கொண்டிருந்தார்.

நோபல் பரிசு பெற்ற பல மேற்கத்திய எழுத்தாளர்களின் பாதையில்தமிழில் புதிய எழுத்துவளரவேண்டும் என்பதையே அவர் எப்போதும் வலியுறுத்தினார்.

அவர்தமிழனாய்ப் பிறந்திருந்தாலும் அவரது இலக்கிய இதயம் ஆங்கில, அமெரிக்க இலக்கிய எழுத்தாளர்களின்தத்துவம் மரபுகளை ஒட்டியே இயங்கிக்கொண்டிருந்தது.

மேலை இலக்கியம் என்று கூறும்போது மேக்சிம் கார்க்கி, மைக்கேல் ஸோலக்கோவ், மயாக்கோவ்ஸ்கி முதலிய தலைசிறந்த சோவியத் எழுத்தாளர்களை இவருக்கு அறவே பிடிக்காது.

இவர்கள் இலக்கிய சாதனையாளர்கள் என்பதை அவர் ஒரு போதும் ஒப்புக்கொண்டதே இல்லை. “மார்க்ஸிய அழகியல்" என்ற இலக்கியக் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட படைப்பாளிகள் உலகத்தரமான கலைப்படைப்புகளை வழங்க முடியும் என்பதை வாழ்நாள் முழுவதும் நிராகரித்தவர் க.நா.சு.

109