பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

போக்கையே கொண்டது. இவர் தனது பார்வையானது "எனது சொந்த ரசனையை அடிப்படையாகக்கொண்டது" என்று மட்டுமே கூறுவார். அது எனது சொந்த அபிப்பிராயம் என்று கூறி 'தனது' முடிவுகளுக்கு காரணகாரியம் எதுவும் கூறாமல் தப்பித்துக்கொள்வார்.

அவரது சொந்த ரசனை என்பதும் ஆளுக்கு ஆள், நேரத்திற்கு நேரம், இடத்திற்கு இடம், வித்தியாசப்படும். இவரது இலக்கியத் தரப்பட்டியல் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். இவரது இலக்கியப் பார்வை தன்வயமானதாகும். இவரது திறனாய்வுப் போக்கைப் பின்பற்றுவோர் தமிழ்நாட்டில் குறுங்குழு வாதிகளாக இன்றும் இயங்கி வருகிறார்கள். இது தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பல்வேறு விதங்களில் தடைக்கற்களாக உள்ளது.

ஆனால் சி.சு. செல்லப்பாவின் திறனாய்வுப் போக்கு க.நா.சு. வின் போக்கிலிருந்து வித்தியாசமானது.

ஒரு படைப்பாளிக்கு கலாரீதியில் மட்டுமின்றி, சமுதாய ரீதியிலும் மிகுந்த பொறுப்பு உண்டு என்பது சி.சு. செல்லப்பாவின் அழுத்தமான இலக்கியக்கொள்கையாகும். எந்த இலக்கியப் படைப்பிலும், சத்தியம் (உண்மை) சிவம்(நன்மை சக்தி), சுந்தரம் அழகு) இம் மூன்றும் இணைந்திருக்க வேண்டும் என்பது இவரது கோட்பாடாகும்.

இந்த அடிப்படையில்தான் சி.சு. செல்லப்பா மணிக்கொடி எழுத்தாளர்களையும், அதற்கு பின் வந்த பிற எழுத்தாளர்களையும், மதிப்பிட்டு, தமது முடிவுகளை வழங்கி உள்ளார்.

மகாகவி பாரதியாரின் "நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்பதே இவரது இலக்கியக் கோட்பாடாகும்.

“சொல் புதிது, பொருள் புதிது, சுவை புதிது" என்னும் பாரதியின் வாக்கின் படிதான் புதுமைத்தமிழ் இலக்கியம் வளரவேண்டும் என்பது இவரதுஅசைக்கமுடியாத நம்பிக்கை. இந்த அடிப்படையில் தான் அவர் எழுத்துப் பத்திரிகையையும் எழுத்துப் பிரசுரங்களையும் வெளியிட்டு வந்தார். தாமும் தனித்துவத்துடன் எழுதினார். பிற எழுத்தாளர்களையும் ஆதரித்தார். தன்னலமற்ற இலக்கியப் பணிகளுக்காக இன்றளவும் சி.சு. செல்லப்பா தமிழ்ச் சமூகத்தால் பெரிதும் மதிக்கப்படுகிறார்.

111