பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

படித்ததைப்பார்த்த அவர் அந்தப் புத்தகத்தை உடனே என்னிடம் கொடுத்து படித்துவிட்டுத்தாருங்கள் என்றார். நானும் வாங்கிக்கொண்டு நீங்கள் எப்படி சார் நாளைக்கு வருவீர்களா? இதைத்தங்களிடம் எப்பொழுது கொடுப்பது என்று கேட்டேன்.

‘இதை நான்தான் எழுதினேன். என் பெயர் சி.சு.செல்லப்பா. சன்னதி பக்கத்தில் உள்ள தெருவில் தான் இருக்கிறேன். நீங்கள் படியுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். இப்படித்தான் எங்கள் சந்திப்பு நடந்தது.

அதன் பிறகு அவர் நான் இருந்த பிள்ளையார் கோவில் முதல் சந்தில் 17 என்ற எண் உள்ள வீட்டிற்கு குடி வந்து விட்டார். அதன் பிறகு நானும் அவரும் நெருங்கிப் பழகும் வாய்ப்பை என்னுடைய படிக்கும் பழக்கம் ஏற்படுத்திக்கொடுத்தது அல்லாமல் குடும்ப விவரங்களும் இருவரும் பரிமாறிக்கொள்ளும் நிலையும் ஏற்பட்டது. தினசரி மாலை அவர் என் கடையில் வந்து உட்கார்ந்து ஒரு மணி நேரம் இருந்து இலக்கியம் சினிமா, சங்கீதம் எல்லாவற்றையும் பேசுவோம். இப்படியான சூழ்நிலையில் எங்கள் இருவர் குடும்ப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வோம். எங்களிடையே இருந்து வந்த அன்பின் காரணமாய் அவருடைய எழுத்தாள நண்பர்கள் யார் அவரைப் பார்க்க வந்தாலும் என்னைக்கூப்பிட்டு அவர் அறிமுகப்படுத்தி வைப்பார்.

இதற்கிடையில் நான் ஒரு புதிய வியாபாரம் ஆரம்பித்தேன். நன்கு நடத்தி வந்த இடத்துக்கு எதிர்பக்கம் ஒரு கடையை திறந்தேன். அதில் தஞ்சாவூர் பக்ஷணக்கடை என்று பெயர் வைத்து இனிப்பு வகைகளும் கார வகைகளும் தயார்செய்து என் மகன்களில் ஒருவனை உட்காரச் சொல்லி வியாபாரம் செய்தேன். அது திரு. சி.சு. செ. அவர்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி தந்தது.

அவர் எங்களுடைய முன்னேற்றத்திலும் எங்கள் வாழ்க்கையிலும் மிகுந்த அக்கறையும் அறிவுரையும் கொண்டு அன்பினாலும் உண்மையான நட்பினாலும் என் குடும்பத்தார் எல்லாரையும் கட்டிப்போட்டு விட்டார்.

அவரும் ருசி அறிந்து என் கடையில் வாங்கிச் சாப்பிடுவார். கோதுமை அல்வா பால் கோவா இவை இரண்டும் அவருக்குப்பிடித்தமானவை. தாமும் சாப்பிடுவார். அவரைத் தேடி

114