பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

சீட்டுப் பணம் இருந்தது. அதிலிருந்து நானும் கொடுத்தேன். மற்றவர்களும் கொடுத்தார்கள். அவரும் அவர் மனைவி மீனாட்சி அம்மாளும் சைக்கிள் ரிக்‌ஷாவில் சுமார் 10 முறைக்கு குறையாமல் அலைந்து திரிந்து உழைத்து புஸ்தகம் வீட்டுக்கு வந்து விட்டது. புஸ்தகம் வந்ததும் அவைகளை வைக்க தன்னுடைய படுக்கை அறையிலேயே ஒரு பீரோ மாதிரி அடுக்கி வைத்தார். அந்தத் தம்பதிகள் இருவருக்கும் எல்லையில்லா சந்தோஷம்.

என்னிடம் ஒரு பிரதியைக் கொடுத்தார். முதலில் நான் பணம் பெற்றுக்கொண்டால் தான் வாங்கிக்கொள்வேன் என்று சொன்னேன். அப்படியானால் அதன் மூன்று பாகங்களும் சேர்ந்து நானூறு ரூபாய் என்ற விலையில்எனக்கு கமிஷன் 100 ரூபாய் கழித்து 300 ரூபாய் பெற்றுக்கொண்டார். அவருடைய எழுத்தாள நண்பர்களுக்கெல்லாம் கடிதம் எழுதினார். பலர் புஸ்தகத்திற்கு தபால் சார்ஜூம் சேர்த்து பணம் அனுப்பி பெற்றுக்கொண்டார்கள்.

எல்லாப் பத்திரிகைகளுக்கும் மதிப்புரைக்காக இரண்டு பிரதிகள் அனுப்பினார். அவரும் என் மகன் சூரியும் ஆட்டோவில் போய் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், கல்கி, குமுதம், துக்ளக், குங்குமம் இந்த பத்திரிகை காரியாலயங்களுக்கெல்லாம் நேரிலேயே கொடுத்து வந்தார்கள். இவைகளில் ஆனந்த விகடன் ஒரே ஒரு பிரதி போதும் என்று ஒன்றை திருப்பிக் கொடுத்து விட்டது. பெற்றுக்கொண்ட ஒரு பிரதிக்கும் விலை ரூ 400 கொடுத்து விட்டார் ஆனந்த விகடன் ஆசிரியர் திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள். விமர்சனமும் சி.சு.செ. + மனைவி பேட்டியும் படமும் வந்தது. கல்கியிலும் சுப்ரபாலன் என்பவர் நன்றாக எழுதினார்.

முதுபெரும் எழுத்தாளரும் சி.சு.செ. வின் நெருங்கிய நண்பருமான திரு. பே.கோ. சுந்தரராஜன் என்கிற சிட்டி தினமணியில் சி.சு.செ. வின் சுதந்திர தாகம் ஒரு இதிகாசம் போன்றது என்று குறிப்பிட்டார். துக்ளக்கிலும் விமர்சனம் வந்தது.

வெளியூர்களில் இருந்து பல பேர்கள் தாங்கள் நடத்தும் பள்ளிகளுக்கும் நூலகங்களுக்கும் நேரிடையாக வந்து வாங்கிச்சென்றார்கள். சி.சு.செ. வாங்கிய நான்கு பேர்களுக்கும் கடனை திருப்பிக்கொடுத்து விட்டார். சி.சு.செ. அவர்கள் தன்

116