பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

மகன் வங்கி அதிகாரி. தனக்கோ, குடும்பத்தினருக்கோ தன் புஸ்தகங்கள் வெளியிடுவதற்கோ நிதியுதவி மகனிடம் அவர் கேட்டதே இல்லை.

ஒரு நாள் என்னிடம், ‘சுப்பிரமணிய அய்யர், என் லட்சியம் நிறைவேறிவிட்டது. என்.ஆயுள் முடிவதற்குள் எப்படியாவது சுதந்திர தாகத்தை வெளியிட வேண்டும் என்கிற கனவு நினைவாகிவிட்டது. இன்னும் ஒன்று பாக்கி இருக்கிறது. பி.எஸ். ராமையாவின் கதைகளைப்பற்றி ஒரு விமர்சனம் வெளியிட வேண்டும் என்று சொன்னார். சுதந்திரதாகம். புஸ்தகம் பாதி விற்பனை ஆகிவிட்டது என்றும், அரசாங்க நூலகங்களில் வாங்கிவிட்டார்களானால் தீர்த்து விடும் என்றும், அதற்கான முயற்சியில் தன்னால் தள்ளாமை காரணமாக ஈடுபட முடியவில்லை என்றும் கூறினார். இது நடந்த சில வாரங்களில் பி.எஸ். ராமையாவின் சிறுகதைப்பாணி என்று ஒரு புஸ்தகமும் வெளியிட்டார். பி.எஸ் ராமையாவின் 300 சிறு கதைகளின் சிறப்பும் குறிப்பும் விமர்சனம் கொண்ட நூல் அது விலை 100 ரூபாய்.

முதலில் நான் தான் வாங்க வேண்டும் என்று என் மனைவியிடம் சொல்லியிருந்தார். அச்சமயம் நான் வெளியில் சென்றிருந்தேன். நான் வந்ததும் என் மனைவி சொன்னபடி நான் போய் அவரிடம் 100 ரூபாய் கொடுத்து வாங்கினேன். அதில் சி.சு.செ. அவர்கள் ராமையாவின் 300 கதைகளுக்கும் சுருக்கம் எழுதியிருக்கிறார். அதற்கே அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். படைப்பாளி என்ற சொல்லுக்கு மிகமிகத்தகுதியானவர் திரு. சி.சு. செல்லப்பா அவர்கள்.

திரு. சி.சு. செ. அவர்கள் ஒரு காந்தீயவாதிதான் சந்தேகம் இல்லை. ஆனால் அவருடைய முன்கோபம் அவரை சந்தேகிக்கச் செய்யும். நெருங்கிப் பழகியவர்கள் சமாதானம் செய்து கொள்வார்கள். எந்த ஒரு வேலையையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்திப்போடவே மாட்டார் அவர்.

அக்காலத்திய சினிமா தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் எல்லாப் படங்களையும் அவர் பார்த்திருக்கிறார். அதே போல் நானும் ஒரளவு பார்த்திருப்பதால் அவைகளைப் பற்றி நிறைய நாள் மாலை

117