பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

நேரங்களில் பேசிக்கொண்டிருந்திருக்கிறோம். அக்கால நடிகர்கள் அசோக்குமார், திலீப்குமார், பிருத்விராஜ், சாகு மோடக், பிரேம் அதிப், கோஹர், நடிகை சாந்தாஅப்தே நர்கீஸ், தேவிகா ராணி, இவர்கள் நடித்த படங்களைப் பற்றியும் தற்காலப் படங்களையும் ஒப்பிட்டு தரம்பிரித்துப் பேசுவோம். டைரக்டர்களில் சாந்தாராம், ஷோரப்மோடி புகழ்பெற்ற பாடும் நடிகர்கள் சைகால், கேஸிடே, ஆத்மா இவர்களுடைய படங்களை எல்லாம் விரும்பிப் பார்த்திருக்கிறார் என்பதை அவருடைய விமர்சனத்திலிருந்து தெரிந்து கொண்டேன். அதே போல் தியாகராஜ பாகவதர் படங்கள் அம்பிகாபதி, சிந்தாமணி, சிவகவி, அசோக் குமார், திரு நீலகண்டர் சத்ய சீலன், பி.வி. சின்னப்பாவின் கண்ணகி, குபேரகுசேலா, மகாமாயா - சூர்ய மாலா விகடயோகி மேலும் தமிழ் பட டைரக்டர்களான திரு. ராஜா சாண்டோ, கே.சுப்பிரமணியம், ஒய்.வி. ராவ். பின்.என். ராவ், டைரக்டர் முருகதாஸ், டி.ஆர். சுந்தரம் இவர்களுடைய படங்களையும் பற்றி நானும் அவரும் விமர்சனம் செய்திருக்கிறோம்.

அதே மாதிரி சாப்பிடும் விஷயத்திலும் அவருக்கு மிகவும் உயர்ந்த தரமான ருசி நிறைந்தவைகளே பிடிக்கும். அவர் வீட்டில் தினமும் என்ன என்ன காய்கறிகள் சமைக்க வேண்டும் என்று அவருடைய மனைவிக்கு சொல்லிவிடுவார்.

ஒரு நாள் நான் அவரைக் காண சென்ற பொழுது அவர் சமையலறையில் அடுப்பின் கீழ் அமர்ந்து அடுப்பில் இருந்த சிறிய வாணலியில் உருளைக்கிழங்கு சிறிய துண்டுகளாக நறுக்கியவைகளை நன்றாக, கையில் இருந்தசட்டுவத்தால் அடிக்கடி கிளறி விட்டுக்கொண்டிருந்தார். ஏன்சார் என்ன செய்கிறீர்கள், மாமி எங்கே என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தேன். வாங்கோ வாங்கோ, எனக்கு உருளைக் கிழங்கு ரோஸ்ட் பண்ணத் தெரியவில்லையாம். அதனால் அவரே பண்ணிக்கொள்கிறார் என்று மாமியின் குரல் கேட்டது. சி.சு. செ. அருகில் மாமி நின்றபடி குறை கூறினார்.

உடன் சி.சு.செ. சொன்ன பதில் இது. 'மொறு மொறு' என்று இருக்க வேண்டும். சிகப்பாக இருக்கட்டும் என்று அவளைப் பண்ணச் சொன்னேன். தீய வைத்து விட்டாள். அதனால்தான் நான் இவளுக்கு

118