பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

மைலாப்பூர் சாஸ்திரி ஹாலில் வெளியிடப்பட்டது. இதற்காக சென்னை பரோடா பாங்கில் பணிபுரியும் திரு. ரங்கராஜன் அவர்களின் உழைப்பும் ஆர்வமும் மிக பாராட்டப்பெற வேண்டியது. ஆரவாரம் இல்லாமல் இந்த ரங்கராஜன் அவர்கள் செய்யும் தமிழ் இலக்கியத் தொண்டு மகத்தானது.

திரு.சி.சு.செ. அவர்கள் தனக்கு ரூ.20,000 த்தை விட, தன்னுடைய படைப்பை பலர் படிப்பதையே பணத்தை விட பெரிதாக போற்றினார் என்பதை இதன் மூலம் அறிந்தோம்.

பேரனின் பூணூல் கல்யாணம் முடிந்து மகனும் மருமகளும் பேரனும் திரும்ப பெங்களூர் சென்று விட்டார்கள்.

ஒரு நாள் காலை 10 மணி. திரு.சி.சு.செ. அவர்களின் மனைவி என் கடைக்கு வந்து மாமாவிற்கு உடம்பு சரி இல்லை என்று கொஞ்சம் வீட்டுக்கு வந்து போகும்படி கூப்பிட்டார். திரு.சி.சு.செ அவர்களின் மைத்துனியும் மகனும் மதுரைக்கு சென்றிருந்தார்கள். எனவே உறவினர் என்று சொல்வதற்கு அப்பொழுது யாரும் இல்லை. நான் உடனே சென்று பார்த்தேன். மார்பு வலிக்கிறது, மூச்சுவிடுவது கஷ்டமாக இருக்கிறது என்றும் அமிர்தாஞ்சனம் வெள்ளை தடவியிருப்பதாகவும் சொன்னார். நான் என் மகன் சூரியை அழைத்து குப்புமுத்து தெருவிலிருக்கும் டாக்டர் ரமேசன் என்பவரை உடனே அழைத்துவரும்படி, அவனுடைய ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு போய் அழைத்து வரும்படி அனுப்பினேன். அந்த டாக்டர் ரமேசன் என்பவர் பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் நல்ல பண்பாளர். என் குடும்ப வைத்தியர் அவர்தான். மேலும் தொழில்ரீதியாகவும் நானும் அவரும் வாடிக்கையாளர்கள். பல வருடப்பழக்கத்தில் உரிமையால் அழைத்து வரச்சொன்னேன். (இப்பொழுது எவ்வளவு ஆபத்தான கேசானாலும் கியூவரிசைதான்) உயிர்காக்கும் தொழில் சில சமயம் உயிர் போக்கும் தொழிலாகி விட்டது. அந்த நல்ல டாக்டர் வந்து பார்த்துவிட்டு மார்பில் சளி நிறை இருப்பதாகவும், இரண்டு மூன்று நாள்கள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டும் என்றும் சொன்னார். இதற்கு சி.சு.செவும் சம்மதித்தார். லாயிட்ஸ் ரோட்டில் இருக்கும் ஒரு கிளினிக் அவரே எழுதிக் கொடுத்தார். அப்பொழுது ஆட்டோவில்

121