பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

ஏற்றி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அன்று மாலை சி.சு.செவின் மைத்துணியும் மகனும் வந்து விட்டார்கள். அவர்களிடம் தகவல் தெரிவித்ததும் பொறுப்பை மைத்துணியும் மகனும் மருமகளும் ஏற்றுக் கொண்டு வேளா வேளைக்கு உணவு, இரவுக்கு காவல் எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டு, பெங்களூரில் இருக்கும் மகனுக்கு தெரிவித்தார்கள். மகனும் தன் மனைவியுடன் உடன் வந்தார். சுமார் ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் இருந்து குண்மாகி வீடு திரும்பினார் சி.சு.செ. மகனும் பெங்களூர் சென்று விட்டார்.

இப்பொழுது சி.சு.செ. அவர்கள் மிகவும் சுறுசுறுப்பு அடைந்துவிட்டார். இந்த சமயத்தில்தான். பி.எஸ். ராமையாவின் சிறுகதைப் பாணி ஏற்கனவே கைஎழுத்துப் பிரதியாக இருந்ததை சரிபார்த்து அதற்கான வேலைகளைச் செய்து புத்தகமாக கொண்டு வந்து தன் வீட்டில் அடுக்கி வைத்து விட்டார். பத்திரிகைகளுக்கு மதிப்புரைக்கு தானே அனுப்பி விட்டதாக சி.சு.செ யின் மைத்துணியின் மகன் திரு. சங்கரசுப்பிரமணியன் என்னிடம் கூறினார்.

அந்த நூல் (பி.எஸ். ராமையாவின் சிறுகதைப் பாணி) வாசகர்களுக்கோ. நூலகங்களுக்கோ அல்லது விற்பனைக்கோ சென்றதாக தெரியவில்லை. நான் இரண்டு பிரதிகள் வாங்கினேன். என் நண்பரும் பத்திரிகையாளருமான திருமலை என்பவரிடம் படித்து விட்டுத்தாருங்கள் என்று கொடுத்தேன். அவர் பாவம் மிக நல்லவர். அவரிடமிருந்து ஒரு எழுத்தாளர் படித்துவிட்டு தருவதாக வாங்கிச் சென்றாராம். பல நாள் கழித்து புத்தகத்தை தருமாறு திருமலை கேட்டதற்கு, திருப்பிக் கொடுப்பதற்காகவா என்னிடம் கொடுத்தீர் என்று இரவல் வாங்கியவர் சொல்லிவிட்டார். இவரும் ஒரு எழுத்தாளர்தான். டாக்டர் மு.வ. அவர்கள் சொன்னது போல் கயவர்கள் இல்லாத இடமே இல்லையோ?

திரு.சி.சு.செ.வீட்டில் யாரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நேரிட்டது. மாலை 4 மணி சுமாருக்கு ஒரு கார் வந்தது. சி.சு.செ. குடி இருக்கும் தெருமுனையில் நின்றது. காரிலிருந்து இரண்டு பேர். சி.சு.செ. வீட்டிற்கு சென்றார்கள். சிறிது நேரத்தில் மாமி வந்து என்

122