பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2

‘என் அப்பா வழியில் எனது ஊர் சின்னமனூர். என் தாய் வழியில் என் சொந்த ஊர் வத்தலக்குண்டு. இரண்டு வகையில் பார்த்தாலும் நான்மதுரைஜில்லாக்காரன். ஆனாலும் திருநெல்வேலி ஜில்லா மீது எனக்கு தனி அபிமானம் உண்டு. என் தகப்பனார் பொதுப்பணித்துறை (பப்ளிக் ஒர்க்ஸ் டிப்பார்ட்மெண்ட்) ஓவர்சீயர் ஆக வேலைபார்த்தது அங்கே தான். தாமிரபரணி ஆற்றிலிருந்து குழாய் அமைத்து துத்துக்குடிக்குத்தண்ணீர் கொண்டு செல்லும் பணியை என் அப்பாதான் செய்துமுடித்தார். பல வருடங்கள் நாங்கள் திருநெல்வேலி ஜில்லாவின் பல ஊர்களில் வசித்தோம். என் ஆரம்பப்படிப்பு பாளையங்கோட்டையில் தான் நடந்தது. பிறகு துரத்துக்குடியில் தொடர்ந்தது. தாமிரபரணியை ஒட்டி அமைந்துள்ள முறப்பநாடு, அகரம் கிராமங்களில், நாங்கள் வசித்தோம். காலையில் அப்பாவும் நானும் ஆற்றில் குளித்ததும், அநேக நாட்கள் அப்பா ஆற்றைக்கடக்க என்னை தோளில் தூக்கிக்கொண்டு அக்கரையில் பணிகள் நடக்கும் இடத்துக்கு இட்டுச்சென்றதும் என்னால் மறக்க முடியாத அனுபவங்கள்.

இதற்கெல்லாம் மேலாக, நான் சிறுகதை எழுத்தாளன் ஆக மலர்ச்சி பெற்றதும், என் கதைகள் சுதந்திரச்சங்கு, மணிக்கொடி இதழ்களில் வரத் தொடங்கியதும் நான் ஸ்ரீ வைகுண்டம் ஊரில் வசித்த நாட்களில்தான். அதனாலே நானும் திருநெல்வேலி எழுத்தாளர்களோடு சேர்ந்தவன்தான்; தாமிரபரணித்தண்ணீர்தான் என்னுள் இலக்கிய உணர்வையும் எழுத்தாற்றலையும் ஊட்டி வளர்த்தது என்று நானும் பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடியும்.

இப்படி சி.சு. செல்லப்பா என்னிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறார்.

ஆயினும், அவருக்கு தந்தை வழியில் சொந்தமான சின்னமனூரை விட, தாய் வழிப்பாட்டி ஊரான வத்தலக்குண்டு பேரில்தான் அதிகமான பற்றுதலும், பிரியமும் இருந்தது. அதனால் வத்தலக்குண்டு ஊரில் தோன்றிப் புகழ் பெற்ற எழுத்தாளர்களான

6