பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வல்லிக்கண்ணன்

கடையில் அல்வாவும்-பகோடாவும் வாங்கிக் கொண்டு என்னையும் மாமா அழைப்பதாக கூப்பிட்டார். நானும் போனேன். அங்கே அமர்ந்திருந்த இரண்டு பேர்களிடமும் என்னை அறிமுகப்படுத்தி விட்டு, என்னிடம் கூறினார். 'இவர்கள் லலிதா ஜுவல்லரியிலிருந்து வந்திருக்கிறார்கள். என்னை அழைத்துப் போக. நாளை வருவதாக சொல்லி இருக்கிறேன். நீங்களும் நாளை மாலை எங்களுடன் வரவேண்டும்’ என்று அன்புக் கட்டளையிட்டார்.

மறுநாள் மாலை சொன்னபடியே லலிதா ஜுவல்லரியன் கார் வந்து திரு.சி.சு.செ.வையும் அவர் மனைவியையும் அழைத்துச் சென்றது.

அன்று நான் வர முடியாத காரணத்தை முதல்நாளே சி.சு.செ. அவர்களிடம் சொல்லி விட்டேன். ஆகையால் அன்று அவர்களுடன் செல்லவில்லை. மறுநாள் காலை 10 மணிக்கு சி.செ. அவர்களை சந்தித்தபொழுது அவர் சொன்னவை இது. எங்கள் இருவர்க்கும் இரவு விருந்து சப்பாத்தி, பாசந்தி, போண்டா பொங்கல் என்று பல ஐட்டங்கள். நாங்கள் இருவர், லலிதா ஜூவல்லரியின் முதலாளியும் மானேஜர் முத்துக்குமார், இன்னும் ஒருவர். பிரமாதமாக விருந்து சாப்பிட்டோம். விருந்து முடிந்ததும் எனக்கு சரிகை கரையிட்ட வேஷ்டி மனைவிக்கு பட்டுப்புடவை ஜாக்கெட் துணி இவ்வளவும் கொடுத்துவிட்டு, ஒரு டிரேயில் தங்க சங்கிலிகள் தோடு மூக்குத்தி எல்லாம் வைத்து உங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். என் மனைவிக்கு 100 பவுன்நகை போட்டு என்னுடன் அனுப்பி வைத்தார் என் மாமனார். அவளுக்கு நகைபோட்டுக் கொண்டு அவள் மனம் நிறைந்து விட்டதால் இப்பொழுது வேண்டாம் என்று மறுத்தாள். ஆனால் நான் அதை எல்லாம் புத்தகம் போட்டு அழித்து விட்டேன் என்று மனம் விட்டு சொன்னார். பிறகு அவர்கள் கொடுத்த ஜவுளி வகைகளை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டிலேயே காரில் கொண்டு விட்டுசென்றார்கள். 100 சவரன் நகை அணிந்து திரு.சி.சு.செ. அவர்களுக்கு வாழ்க்கைத் துணைவியான மீனாட்சி மாமிக்கு எவ்வளவு சவரன் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளும் அளவிற்கு திரு. சி.சு. செல்லப்பா அவர்கள் தன் சிந்தனையினாலும்தன் இடையறாத உழைப்பினாலும் சுதந்திர தாகம்

123