பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எழுத்து - சி.சு. செல்லப்பா

என்ற நாவலின் மூலம் பல இலட்சம் ரூபாய்கள் மீனாட்சி மாமி கை எழுத்து போட்டு வாங்கிக் கொள்ளும் படி செய்துவிட்டார். எப்படி? மூன்று பாகங்கள் கொண்ட சுதந்திர தாகம் என்ற நாவல் விலை நானூறு (400) ரூபாய். தமிழ்நாட்டு நூலகங்களுக்கு வாங்கிக் கொள்ள அரசாங்க அனுமதி கிடைத்து விட்டது. நூலகங்களுக்கான தனி விலையானாலும் 400 பிரதிகளுக்கு எவ்வளவு ரூபாய் நீங்களே எத்தனை லட்சம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மீனாட்சி மாமிக்கு என்ன குறை?

கணவர் உயிருடன் இருக்கும்பொழுது இந்த நூலகங்களுக்கான உத்தரவு கிடைத்திருந்தால்? இதுதான் மீனாட்சி மாமியின் குறை.

சில நாள்களுக்குப் பிறகு மீண்டும் சளியும் சனிபகவானும் கூடவே வந்து விட்டார்கள். முன் வைத்தியம் செய்த அதே ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். இம்முறை மகன் மருமகள் பேரன் மைத்துனி, இவரின் மகன் மனைவி கூடவே இருந்தார்கள். காலை 10 மணிக்கு, பல ஆயிரக்கணக்கான வாசகர்களுக்கு சுதந்திர தாகத்தை அளித்த உயிரும் மூச்சும் சி.சு. செல்லப்பா என்ற உடலை விட்டு சுதந்திரமாக தத்தம் பயணத்தைத் தொடங்கின.

திரு. சி.சு.செல்லப்பா அவர்களுடைய சிறப்பான குணங்கள் என்றும் என் உள்ளத்தில் பதிந்து அவரைப்பற்றி பெருமையாக எண்ணச் செய்கின்றன. எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராக இருந்த போது, இலக்கியங்களுக்கு என்று (ராஜ ராஜன்) பரிசு திட்டத்தை ஏற்படுத்தினார். ஒரு முறை சுத்தானந்த பாரதி அவர்கள்எழுதிய ‘பாரத காவியம்' என்ற நூலுக்கு கிடைத்தது. ஒரு லட்சரூபாய் நிதி.

அதன் பின் அதே பரிசுத் தொகையை இரண்டு பேர்களுக்குப் பிரித்து (50ஆயிரம் வீதம்) அளிக்க முன்வந்தார்கள். அதில் சி.சு.செல்லப்பாவும் ஒருவர். மற்றவர் பெயர் நினைவில்லை. இதை சி.சு. செல்லப்பா அவர்கள் ஏற்க மறுத்து விட்டார். இலக்கியத் தராதரம் தெரியாதவர்களுடைய பரிசு எனக்குத் தேவைஇல்லை என்று அழுத்திக் கூறி விட்டார்.

124