பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வல்லிக்கண்ணன்



பழக்க முறையாகி விட்ட ரீதியிலேயே கருத்துக்களையும் அலுக்கும்படியாக, ஒரேவிதமாகக் கொடுக்கும் ஒரு மனப்பாங்கு பரவியுள்ள நிலையில் -

மக்களுக்கு இன்னின்னவைகளைக் கொடுத்துப் பிடிக்கச் செய்யவேண்டும். புதுப் புதுவிதமாக, நோக்கும் பார்வையும் கொண்டு வெளியிட்டுச்சொல்ல வேண்டும் என்ற ஒரு நினைப்பு - ஒரு மொழி இலக்கியத்துக்கு அவசியமானது. அந்த நினைப்புடன் எழுத்து ஏடுகள் பெருகும்"-என்கிறார். இந்த நோக்கத்தை இன்னும் அழுத்தமாகச்சொல்ல விரும்புகிறவர்போல !

‘சுவடு தெரிகிற தடத்திலே செல்ல மறுத்து, புதுத்தடம் போட்டுக்கொண்டு இலக்கியத்தின் எல்லைகளை சற்று விரிவடையச் செய்ய முயன்றவர்களைத்தான் சோதனைக்காரர்கள் என்று சொல்லலாம்” என்று க.நா.சுதன் 'சிறந்த தமிழ்ச்சிறுகதைகள்’ என்ற கட்டுரையிலே கூறியுள்ளது அப்படியே எழுத்து தன் குறிக்கோளாகக்கொண்டுள்ள லக்ஷியமாகும். சோதனை செய்து பார்ப்பவர்களால்தான் இலக்கியமே வளர்ந்திருக்கிறது. தமிழ் இலக்கியத்துக்கு முதல் நாவலைத் தந்த வேதநாயகம்பிள்ளையும், சிறுகதையைத் தந்த வ.வே. சு அய்யரும், புதுக்கவிதை தந்த பாரதியும், வசனநடையில் புதுமைகாட்டியவராவும் இந்த வழிவந்த மற்ற சிலரும் சோதனைக்காரர்கள். இன்றைய இலக்கியம் பற்றிப் பேசும்போது இவர்களைத்தான் முதலில் குறிப்பிடுகிறோம். சுயமாக, தனித்தன்மையுடன்கலை உருவம் படைத்தவர்களை, அதே சுவடில் பின்பற்றி காப்பியடித்து சிருஷ்டிப்பவர்களை ரசிக உள்ளம் அவ்வளவாக நீண்ட நாளைக்குத் தன் நினைவில் இருத்திக் கொள்வதில்லை. ஆகவே இலக்கிய அபிப்பிராயம் சம்பந்தமாக மாறுபட்ட கருத்துக்களுக்கு களமாக எழுத்து அமைவது போலவே, இலக்கியத்தரமான எத்தகைய புது சோதனைக்கும் எழுத்து இடம் தரும்” - என்று விளக்கமாக எழுதியிருக்கிறார்.

செல்லப்பா குறிப்பிட்டிருப்பதுபோல - அவரது 'எழுத்து’ முதல் இதழ் வித்தியாசமானதாக - எழுத்து எனக்குப் பிடிக்கிறது என்று அந்த முதல் இதழைப் படித்தவர்கள் பாராட்டும்படியாக அமைந்திருக்கிறதா என்றால் 'ஆம்’ என்று செல்லப்பா பாணியிலேயே தயக்கமில்லாமல் பதிலளித்து விடலாம்.

129