பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எழுத்து - சி.சு. செல்லப்பா


1959ஆம் வருடம் ஜனவரி மாதம்தொடங்கப்பட்ட 'எழுத்து’ தொடர்ந்து பத்து ஆண்டுகள் வெளிவந்திருக்கிறது. அத்தனை இதழ்களைப் பற்றியும் விமர்சிக்க பக்கங்கள் போதாது என்பதால் முதல் இதழை மட்டும் சற்று விரிவாகவே பரிசீலித்துப் பார்க்கலாம்.

முதல் இதழின் அட்டையிலேயே 'எழுத்து வளர' என்ற தலைப்பில் சி.சு. செல்லப்பாவின் ஆசிரிய உரை - ஆரம்பமாகிவிடுகிறது. பொருளடக்கமும் அட்டைப் பக்கத்திலேயே அரைப்பக்க அளவில் வெளியிடப்பட்டிருக்கிறது. அட்டைப்படம் என்று ஒரு பக்கத்தை வீணடிக்க அப்போது செல்லப்பா விரும்பவில்லை போலும்.

செல்லப்பாவின் ஆசிரிய உரைக்கு அருகில் முதல் செய்தி விமர்சனக் கட்டுரையாக க.நா.சு எழுதிய சாகித்திய அகாடமி தமிழ் பரிசு என்ற கட்டுரை இடம் பெற்றிருக்கிறது.

ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளர் யார்? அவரது படைப்பு எது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதுமே -அந்த எழுத்தாளரைப் பிடிக்காதவர்கள் அவரைத் தாக்குதாக்கென்று தாக்குவதும் அவரது படைப்பில் மதிப்புக் கொண்டவர்கள் பாராட்டுவதும்-இப்போதும் வருடந் தோறும் நடைபெற்று வரும் வாடிக்கையாக இருந்துவருகிறது.

சாகித்ய அகாடமி தொடங்கி மூன்றாவது முறையாக ராஜாஜி எழுதிய சக்ரவர்த்தித்திருமகன் - இராமாயண நூலுக்குப் பரிசு அறிவித்திருந்தபோது 'எழுத்து' முதல் இதழ் வந்தது. அதனால் க.நா.சு. அதையே அழைப்பு அபிப்பிராயம் என்ற பகுதியில் விமர்சித்திருக்கிறார்.

"வளரும் தமிழ் இலக்கியத்துக்கும் டெல்லி சாகித்திய அகாடமிக்கும் ஒருவித தொடர்புமேயில்லை என்பது அவர்கள் இதுவரை அறிவித்திருக்கிற மூன்று பரிசுகளிலிருந்தும் ஓரளவு தெளிவாகவே தெரிகிறது. சாகித்ய அகாடமியார் இதுவரை தமிழுக்கு மூன்று பரிசுகளை அளித்திருக்கிறார்கள். பரிசு பெற்ற இந்த மூன்று நூல்களுமே இலக்கிய ரீதியில் வளரும் தமிழ் இலக்கியத்தில் நல்ல ஸ்தானம் பெறக்கூடியவை அல்ல. சாகித்ய அகாடமியார் பரிசளிப்பது சாகித்தியத்துக்காகத்தானே இருக்கவேண்டும்? அதற்குப்பதில் அவர்கள் ஆசிரியர்களின் ஸ்தானத்தை மட்டுமே மனசில் கொண்டு

130