பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எழுத்து - சி.சு. செல்லப்பா


க.நா.சு.வின் கட்டுரையைத் தொடர்ந்து - ந. பிச்சமூர்த்தியின் 'பெட்டிக்கடை நாரணன்' என்ற கவிதை வெளியிடப்பட்டிருக்கிறது. கவிஞர் பிச்சமூர்த்தியைப் பற்றி ஆசிரியர் எழுதிய அறிமுகக் குறிப்பு ஒன்றும் - கவிதையோடு சேர்த்து வெளியிடப்பட்டிருக்கிறது.

"சிறுகதைகள், ‘பிக்ஷு’ என்ற புனைபெயரில் கவிதைகள்" 'ரேவதி' என்ற புனைபெயரில் இலக்கியக் கட்டுரைகள். சென்ற கால் நூற்றாண்டுக் எழுதிவரும், முன்வரிசைப் படைப்பாளிகளில் ஒருவரான பிச்சமூர்த்தி தஞ்சை ஜில்லாவில் 1900-இல் கும்பகோணத்தில் பிறந்தவர். பதினெட்டாம் பெருக்கு, மோஹினி, 'ஜம்பரும் வேஷ்டியும்' என்ற மூன்று சிறுகதைத் தொகுதிகளும் ‘காளி’ என்ற நாடகமும் அவருடையவை வெளியாகியிருக்கின்றன. 'மாயமான்' என்ற நாடகமும் வசன கவிதைகள் என்ற கவிதைத் தொகுப்பும் வர இருக்கிறது. தற்போது சென்னையில் நவ இந்தியா தினசரியில் உதவி ஆசிரியராக இருக்கிறார்.

- என்பது பிச்சமூர்த்தி பற்றிய குறிப்பாகும். இந்த இதழில் எழுதியுள்ள எல்லோருடைய எழுத்துக்களுக்கும் அடியில் - எழுதியவர்களைப் பற்றிய அறிமுகங்களை இதுபோல சுருக்கமாக வெளியிட்டிருக்கிறார் சி.சு.செ.!

இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை என்று செல்லப்பா எழுதிய கட்டுரையிலும்

“இந்தப் பத்திரிகையின் பொறுப்பு ஏற்றிருக்கும் சி.சு.செல்லப்பா மதுரை ஜில்லா வத்தலகுண்டில் 1912இல் பிறந்தவர். ‘ஸரஸாவின் பொம்மை' ‘மணல் வீடு’ ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகள் அவருடையவை வெளியாகி இருக்கின்றன"

- என்ற அறிமுகக் குறிப்பை தன்னைப் பற்றியும் வெளியிட்டிருகிறார்.

'எழுத்து' வெளிவந்த கால கட்டத்தில் - அன்றைய இலக்கிய உலகின் ஜாம்பவான்கள் என்று போற்றப்பட்ட தலைசிறந்த எழுத்தாளர்களின் கட்டுரைகள் - கவிதைகள் - சிறுகதை - புத்தக விமர்சனக்கட்டுரை ஆகியவை இந்த முதல் இதழில் வெளி வந்திருப்பது -வாசகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு

132