பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வல்லிக்கண்ணன்


பிரமிப்பிலும் ஆழ்த்துவதாக அமைந்திருக்கிறது. காரணம் அன்று - பெரிய பத்திரிகைகள் - அதாவது ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள், அமுதசுரபி, சுதேசமித்திரன் வாரப்பதிப்பு போன்றவை வெளியிட்டு வந்த தீபாவளி மலர்களில்தான் இத்தனை பெரிய எழுத்தாளர்களின் அத்தனை படைப்புகளும் இடம் பெற்றிருக்கும்.

32 பக்கங்களில் - ஐம்பது பைசா விலையில் -வெளிவந்த 'எழுத்து' முதல் இதழில் மயன் என்ற புனைபெயரில் க.நா.சு எழுதிய கவிதை ஒன்றும் அவரே ஆங்கிலக் கவி ஹல்மே எழுதியதைப் பின்பற்றி எழுதிய கவிதை ஒன்றும், 'சிட்டி', ‘சாலிவாஹனன்’ ஆகியோரின் கவிதைகளும் இடம் பெற்றிருக்கின்றன.

சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் - ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் என்ற தலைப்பில் க.நா.சு வின் விரிவான விமர்சனக் கட்டுரையும் - ‘பாரதிக்குப்பின்' என்ற பொதுத்தலைப்பின் கீழ் முதலாவதாக அவர் எழுதிய டாக்டர் சாமிநாதையர் என்ற வாழ்க்கை விமர்சனக்கட்டுரையும் இடம் பெற்றிருப்பதோடு சிட்டி - தமது இயற்பெயரிலேயே (பெ.கோ. சுந்தரராஜன்) எழுதிய 'தாழையூத்தது' என்ற சிறுகதையும் பிரசுரமாகியுள்ளது.

சி.சு.செல்லப்பா ‘இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை - கமலாம்பாள் சரித்திரம்-பி.ஆர். ராஜம்அய்யர்நாவல்' என்கிற இரண்டு கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

ந. சிதம்பர சுப்ரமண்யனின் விண்ணும் மண்ணும் கட்டுரைத் தொடர் இந்த முதல் இதழில் ஆரம்பமாகி இருக்கிறது.

‘புஸ்தகங்கள்' என்று தலைப்பிட்ட பகுதியில் முதல் புத்தக விமர்சனக்கட்டுரையை தி.ஜானகிராமன் எழுதியிருக்கிறார். எம். வி. வெங்கட்ராம் எழுதிய இருட்டு 'உயிரின் யாத்திரை' என்கிற இரண்டு புத்தகங்களைப் பற்றி இரண்டு பக்கங்கள் விரிவாக விமர்சித்திருக்கிறார். தி.ஜா.

"அட்டை பளபளவென்று கண்ணைப் பறிக்கிறது” “ஆசிரியரே எழுதிய கவிதைகளின் தொகுப்பு" "நறுக் நறுக்கென்று சுருக்கமாக எழுதப்பட்ட கருக்கான தகவல்கள்" என்று ஒற்றை

133