பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வல்லிக்கண்ணன்


பொருள் இருக்கட்டும்; ஆசிரியர் என்ற அடிப்படையில் சி.ராஜகோபாலாச்சாரியாருக்கு பரிசு கொடுத்ததால் அகாடாமிக்குத் தான் பெருமை. இதைத் தடுக்க எழுத்தாளனுக்கு என்ன உரிமை?

எழுத்தாளனுக்கு - சிருஷ்டி எழுத்தாளனுக்கு, இலக்கிய ரீதியில் வளரும் தமிழ் எழுத்தாளனுக்கு அகாடமி பரிசு கிடைத்தால் தான் பெருமையா? அந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள் தானா க.நா.க பட்டியலில் காணும் இலக்கியக்கலைஞர்கள்? அவர்களுக்குப் பரிசுக் கொடுப்பதில் அகாடமிக்குக் கூடத்தயக்கம் இருக்காது என்று நம்புகிறேன். அந்தச் சமயத்தில் க.நா.சு குறிப்பிட்ட ஆறு பேர்களுடன் அவருடைய சிறுகதைப்பட்டியலில் மட்டும் இடம்பெறும் 'மெளனி'யின் இலக்கிய சேவைக்கும் அகாடமியின் அங்கீகாரம் கிடைக்கட்டுமே!

- என்று எழுதியிருக்கிறார் வி.ரா.ரா

இந்தக்கடிதம் இன்றுபோலவே அன்றும் பிடித்தவரைப் பெருமைப்படுத்துவது என்பதோடு நில்லாமல் பிடிக்காதவர்களையும் அதே சாக்கில் ஒரு தாக்குத்தாக்கிவிடுவது என்கிற போக்கு, அன்றே இருந்திருக்கிறது என்பதைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது!

'எழுத்து' ஏடு-கடிதங்கள்பகுதியில் இன்னொரு புதுமையைச் செய்திருப்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகிறது. பொதுவாக அன்றும்-இன்றும் வாசகர்கடிதங்கள் பகுதியில் பத்திரிகையின் ஆசிரியர்கள்-கடிதம் எதையும் எழுதுவது கிடையாது. தவறான தகவலை வாசகர்கள் யாராவது சுட்டிக் காட்டினால் நறுக்குத்தெரிந்தாற்போல - நாலுவரிகள் வருத்தம் தெரிவிக்கப்பட்டிருக்கும். அதில் ஆசிரியர் என்று முழுவதுமாக எழுதினால் அதுவே நீளமாகிவிடும் என்பதாலோ என்னவோ (ஆர்) என்று அதையும் கூட வருத்தத்துக்குக்கீழே சுருக்கியே எழுதுவார்கள்.

செல்லப்பா இந்த விஷயத்திலும் ஒரு புதுமையைப் படைத்துக்காட்டி இருக்கிறார். முதல் இதழில் க. நா.சு எழுதிய சிறந்த தமிழ்ச்சிறுகதைகள் என்ற கட்டுரையில் கூறப்பட்டிருந்த கருத்துக்களை மறுத்து தஞ்சாவூரில் இருந்து சாமினாத ஆத்ரேயன் எழுதிய கடிதத்தை வெளியிட்ட செல்லப்பா- அதனைத் தொடர்ந்து க.நா.சுவின் இந்தக்கட்டுரைபற்றியதமது கருத்து என்ன என்பதையும்

137