பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வல்லிக்கண்ணன்



... அடுத்தாற் போல் ஒர் ஆசிரியப்பட்டியல் - ஆசிரியரின் திறன் என்ற அடிப்படையில் இலக்கிய விமர்சனம் கவைக்கு உதவாதது. தலைசிறந்த ஆசிரியர்களின் எல்லாசிருஷ்டிகளுமே ஒரே தரத்தைச் சேர்ந்ததல்ல. அனாமதேய ஆசிரியர்களின் ஒன்றிரண்டு மிக உயர்ந்ததாகவும் அமைந்திருக்கலாம். ஆகவே தனிப்பட்ட ஒரு இலக்கியத்தைப் பற்றிய சர்ச்சைதான் இலக்கிய விமர்சனம் ஆகும்.

... அழகான பொருள் அழகாக மட்டும் இருக்கலாமே தவிர உபயோகப்பட்டுவிடக்கூடாது. அப்படி உபயோகப் படுத்தி விட்டால் அதற்கு அழகு இருந்தாலும் அதைப் பொருளாக ஏற்றுக் கொள்ளக்கூடாது - என்ற ரீதியில் விதவைகளை உயர்த்துவதாகப் பயன்படக்கூடிய மாதவையாவின் கதைகளுக்கு மதிப்புத்தர மறுக்கிறார் க.நா.சு.

கல்கியின் ‘கேதாரியின் தாயார்' என்ற சிறுகதைக்கு இலக்கிய மதிப்பில்லை. ஏனென்றால் அது விதவைக்கு இரக்கம் காட்டுகிறது. அதன் ஆசிரியர் பத்திரிக்கைகதை எழுத்தாளர்கும்பலைச் சேர்ந்தவர். தமிழில் உருவமென்பது கல்கிக்கு எட்டாத ஒன்று என்று சொல்வது சரியாகாது.

.. பழைய மணிக்கொடி கோஷ்டியினர் சிலரும் பின்வந்த மூவரும் தவிர வேறு யாரும் சிறப்பான சிறுகதைகள் என்று சொல்லும் படி எதுவும் எழுதவில்லை என்பது கண்ணை மூடிக்கொண்ட கொக்கின் அபிப்பிராயம். இலக்கிய விமர்சனம் அல்ல’’.

- என்று எழுதியிருக்கிறார் சாமிநாத ஆத்ரேயன்.

ஆத்ரேயனின் விமர்சனத்தையொட்டி-க.நா.சுவின் கட்டுரை பற்றிய தமது கருத்தை தயவு தயவுதாட்சண்யத்திற்கு இடமில்லாத வகையில்-அதே கடிதங்கள் பகுதியில் தாமும் ஒரு வாசகராக மாறி எழுதியிருக்கிறார் ஆசிரியர் செல்லப்பா.

“ஒரு தொகுப்பைத்தயாரிப்பதில், தான்கையாளும் முறையை, தன் உத்தேசத்திற்கு ஏற்ப வகுத்துக்கொள்ள தொகுப்பாசிரியனுக்கு உள்ள சுதந்திரம் அவருடையது. நாமும் அவர் எந்த நோக்குடன் தொகுத்திருக்கிறார் என்பதை, அவர் முகவுரையாகக்கூறும் விளக்கத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட இலக்கிய

139